அதிரை நியூஸ்: ஜூலை 26
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (26.07.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் பகுதிகளில் நடைபெறும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் நேற்று (25.07.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இன்று (26.07.2020) தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட சேப்பனநாயக்கன் வாரி அங்கன்வாடி மையம், வடக்கு ராஜ வீதி, படே உசேன் அல்லா கோயில் தெரு ஆகிய இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, காய்ச்சல் பரிசோதனை செய்ய வந்த பொதுமக்களிடம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கை கழுவுதல், கிருமி நாசினி தெளித்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் ஒன்பது இடங்களில் இன்று (26.07.2020) காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சியில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் 56 தெருக்கள் கண்டறியப்பட்டு, 558 பணியாளர்கள் மூலம் 104 முகாம்கள் நடத்தப்பட்டு, 4130 நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டதில் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் உள்ளவர்களில் 58 நபர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 2 நபர்களுக்கு நோய்தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதெனவும், 23 நபர்களுக்கு அறிகுறிகள் இல்லையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. 33 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
கும்பகோணம் நகராட்சியில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் 105 தெருக்கள் கண்டறியப்பட்டுää 603 பணியாளர்கள் மூலம் 109 முகாம்கள் நடத்தப்பட்டு, 8735 நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டதில், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் உள்ளவர்களில் 66 நபர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 2 நபர்களுக்கு நோய்தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதெனவும், 16 நபர்களுக்கு அறிகுறிகள் இல்லையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. 48 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
பட்டுக்கோட்டை நகராட்சியில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் 37 தெருக்கள் கண்டறியப்பட்டு, 281 பணியாளர்கள் மூலம் 33 முகாம்கள் நடத்தப்பட்டு, 2937 நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் உள்ளவர்களில் 15 நபர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 2 நபர்களுக்கு நோய்தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதெனவும், 12 நபர்களுக்கு அறிகுறிகள் இல்லையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. 1 நபருக்கு பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஊரக பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் 324 தெருக்கள் கண்டறியப்பட்டு, 1937 பணியாளர்கள் மூலம் 379 முகாம்கள் நடத்தப்பட்டு, 18063 நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் உள்ளவர்களில் 588 நபர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 7 நபர்களுக்கு நோய்தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதெனவும், 546 நபர்களுக்கு அறிகுறிகள் இல்லையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. 35 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் 522 தெருக்கள் கண்டறியப்பட்டு, 3379 பணியாளர்கள் மூலம் 625 முகாம்கள் நடத்தப்பட்டு, 33865 நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் உள்ளவர்களில் 727 நபர்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 13 நபர்களுக்கு நோய்தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதெனவும், 597 நபர்களுக்கு அறிகுறிகள் இல்லையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. 117 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும், சர்க்கரைநோய் மற்றும் சிறுநீரகம் பாதிப்பு உள்ளவர்களையும் கொரோனா வைரஸ் கிருமி அதிக அளவில் தாக்குகிறது. மேலும் இருமல், மூச்சுதிணறல், சளி, தொண்டை கரகரப்பு உடையவர்கள் சுயமாக மருந்து உட்கொள்ளாமல் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று சிகிச்சை எடுத்துக்கொண்டால், நோய்த்தொற்றுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
எனவே, இந்த நோய் அறிகுறி உள்ளவர்கள் முன்னதாகவே பரிசோதனை மேற்கொண்டு உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம்களில் ஏற்கனவே மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொண்டுள்ளவர்கள், நோய்அறிகுறி உள்ளவர்களும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாய்வின் போது, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாநகர் நல அலுவலர்(பொ) டாக்டர் முத்துக்குமார், வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.