தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ரோட்டரி சங்க 2020-2021 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா பட்டுக்கோட்டை செல்வா மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்விற்கு, பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் ஏ ரமேஷ் தலைமை வகித்தார்.
நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநர் ஏ.ஆர் அன்பு புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். இதில், பட்டுக்கோட்டை ரோட்டரி சங்க புதிய தலைவராக எஸ். பைசல் அகமது, செயலாளராக ஏ. சக்திவேல், பொருளாளராக எஸ் சுல்தான் இப்ராகிம் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில், ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் சமூக இடைவெளியையுடன் கலந்துகொண்டனர்.
பணி சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteCongratulations
ReplyDelete