.

Pages

Tuesday, July 21, 2020

மின் கட்டணம் விவகாரம்: அதிராம்பட்டினத்தில் திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 21
மின் கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக சார்பில், இன்று செவ்வாய்க்கிழமை வீடுகளில் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கப் போராட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, திமுக அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில், அக்கட்சியினர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, கருப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

இதில், மின் கட்டண 'ரீடிங்' எடுத்ததில் உள்ள குழப்பங்களை நீக்கி, மின் நுகர்வோருக்குச் சாதகமான முறையில் கணக்கிட்டு, ஊரடங்கு கால மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை எளிய மாதத் தவணையாகச் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கக்கோரி வலியுறுத்தப்பட்டது.

இதில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் பொருளாளர் கோடி முதலி, துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான், சி.தில்லைநாதன், மாவட்ட பிரதிநிதிகள் இன்பநாதன், எம்.பகுருதீன், ஒன்றியப் பிரதிநிதிகள் முல்லை ஆர்.மதி, வீரப்பன், கே.நாகராஜ் (மீனவரணி), அதிரை மைதீன் (இளைஞர் அணி), டி.முத்துராமன், இராமநாதன், பாஞ்சாலன், ஏ.வி.எம் வரிசை முகமது, நூர் முகமது (நூவண்ணா), குலாப்ஜாமூன் அன்சாரி, எம்.எம்.எஸ் அன்வர், எம்.அன்வர்தீன், எம்.செய்யது முகமது, வீரசேகரன், வடுகநாதன் (மதிமுக) மற்றும் திமுகவினர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.