.

Pages

Wednesday, July 15, 2020

தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

அதிரை நியூஸ்: ஜூலை 15
கரோனா வைரஸ் (COVID-19) நோய் தொற்று பரவலினை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக ஊடரங்கு அமல்படுத்தப்பட்டு, இக்காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கியும், பொருளாதார மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தற்போது 31.07.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இவ்வூரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- ரொக்க நிவாரணத்தினை அவர்கள் வீட்டிலேயே வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் அசல் தேசிய அடையாள அட்டையினை காண்பித்தும் அதன் நகலினை நிவாரணத் தொகை வழங்கும் அலுவலரிடம் சமர்பித்து நிவாரணத் தொகை ரூ.1000ஃ- பெற்றுக் கொள்ளலாம். விநியோகப் படிவம் பூர்த்தி செய்ய தேவையான விவரங்களை மாற்றுத்திறனாளிகள் அளிக்க வேண்டும். அளிக்கப்படவேண்டிய விபரங்கள் தனிநபர் சம்மந்தப்பட்ட விவரம், கல்வித்தகுதி, வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் UDID விண்ணப்ப நிலை ஆகியவையாகும்.

நிவாரணத் தொகை வழங்கும் அலுவலர் நிவாரணத் தொகை வழங்கிய விவரத்தினை தேசிய அடையாள அட்டையுடன் கூடிய பதிவு புத்தகத்தில் உதவிகள் வழங்கும் பக்கத்தில் “COVID -19 நிவாரணத் தொகை ரூ.1000/- வழங்கப்பட்டது” என்ற முத்திரையிட்டு, வழங்கும் அலுவலர் கையொப்பமிடுவார். நிவாரணத் தொகை இரண்டு 500/- ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும்.

இந்த நிவாரண உதவி தொகை 30.06.2020 நாளிலிருந்து தொடங்கி தொடர்ந்து காலை 10.00 மணி முதல் மாலை 6.00  மணி வரை பயனாளிகளின் இருப்பிடத்திற்கே நேரில் வந்து சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுநாள் வரை 18000 மாற்றுத்திறனாளிகள் மேல் கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.1000/- பெற்று பயனடைந்துள்ளார்கள்.

ஒரு மாற்றுத்திறனாளியும் கூட விடுபடாத வகையில், அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில்ää இதுநாள்வரை நிவாரண  உதவித்தொகை ரூ.1000/-   பெறாத அனைவரும் 31.07.2020 க்குள் நிவாரண உதவித்தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிவாரணத் தொகை பெறுவதில் சிரமம் ஏதேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் தொலைபேசி (கைபேசி எண். 9442573315 அல்லது அலுவலக எண். 04362-236791) மற்றும் உதவி மறுக்கப்படும் நேர்வில் அல்லது கிடைக்கப் பெறவில்லை எனில் மாநில மைய எண்:18004250111-ல் தொடர்பு கொள்ளலாம்.

நிவாரணத் தொகையினை மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் அல்லது சிறப்பு க10ழ்நிலையில் பாதுகாவலர்களிடம் மட்டுமே வழங்கப்படும்.

வேறு மாவட்டங்களை அல்லது நிவாரணத் தொகை வழங்கும் அலுவலர் பகுதிக்கு உட்படாத பிற பகுதிகளை சார்ந்த மாற்றுத்திறனாளிகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டையுடன் வசித்தால் அவர்களின் பெயர் மற்றும் பிற விவரங்களை தனியாக பதிவு செய்து அவர்களுக்கான நிவாரண உதவித்தொகை மாற்றுத்திறனாளி தற்காலிகமாக தங்கியிருக்கும் கிராமத்தை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அதன் விவரம் உடனடியாக தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு தெரிவித்திட வேண்டும்.

அரசு போதிய நிதியினை ஒதுக்கியுள்ளதால், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நிவராணத் தொகை ரூபாய் 1000/-  சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறும்போது, (1) மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் (2) குடும்ப அட்டையின் நகல் ஆகியவற்றினை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

அது தவிர, மாற்றுத்திறனாளிகளிடம் கீழ்க்கண்ட ஆவணங்கள் இருப்பின், அவற்றையும் கூடுதலாக சமர்ப்பித்தால், அந்த ஆவணங்களை கொண்டு வருங்காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்யும் போது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

அவையாவன 
(1) ஆதார் அட்டையின் (Aadhar Card) நகல்
(2) இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டையின் (UDID Card) நகல்
(3) மாற்றுத்திறனாளியின் வங்கிக் கணக்கு எண் குறித்த வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் மற்றும் கடைசி பக்கங்களின் நகல் மற்றும்
(4) 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளியாக இருந்தால், வாக்காளர் அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றையும் உதவிகள் வழங்கிடும் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.