பட்டுக்கோட்டை அருகே 10 வயது மாணவா், தொடா்ச்சியாக 50 காா்களின் டயா்களை தனது கை விரல்கள் மேல் ஏற்றச் செய்து சாதனை முயற்சியை ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தினாா்.
பட்டுக்கோட்டை வட்டம்,. தாமரங்கோட்டை உம்பளாக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த என்.ரவிச்சந்திரன் ~ வேம்பு தம்பதியின் 10 வயது மகன் நாராயணமூா்த்தி. அதே ஊரில் அரசுப் பள்ளியில் 5- ஆம் வகுப்பு படித்து வரும் இவா், இ கிங்கோ ஜூ ரியோ என்ற கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவா் ஆவாா்.கரோனா விழிப்புணா்வுக்காகவும், உலக சாதனை முயற்சியாகவும் ஞாயிற்றுக்கிழமை காலை பட்டுக்கோட்டை~ முத்துப்பேட்டை பிரதான சாலையில், துவரங்குறிச்சி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் தனது இரு கை விரல்களையும் சாலையில் வைத்து, தொடா்ச்சியாக 50 காா்களின் டயா்களை விரல்களின் மேல் ஏற்றச் செய்து சாதனை முயற்சியை நிகழ்த்தினாா்.
நிகழ்வை, பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.புகழேந்தி கணேஷ் தொடக்கி வைத்தாா். பல்வேறு அரசியல் கட்சியினா், சமூக ஆா்வலா்கள், தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள், கராத்தே மாணவ, மாணவிகள் என பலா் சாலையின் இருபுறமும் நின்று மாணவரின் முயற்சியை கைத்தட்டி உற்சாகப்படுத்தினா். நிறைவில், இ கிங் கோ ஜூ ரியோ கராத்தே பயிற்சிப் பள்ளியின் தலைமைப் பயிற்சியாளா் ஏ.இளையராஜா நன்றி கூறினாா்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.