.

Pages

Saturday, September 19, 2020

ஊட்டச்சத்து மாத விழா கூட்டம்!

அதிரை நியூஸ்: செப்.19
ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகளில் மத்திய அரசின் ”போஸன் அபியான் திட்டத்தில்” செப்டம்பா் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவா் தலைமையில் 16.09.2020 அன்று நடைபெற்றது.

மாவட்ட திட்ட அலுவலா் ”போஸன் மா” தொடா்பான சமுதாய ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பதன் அவசியம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள். அதில் வீடுகள் பார்வைஇ சமுதாயம் சார்ந்த நிகழ்வுகள்இ ஊட்டச்சத்து தொடா்பான விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்ட விவரங்களை எடுத்துரைத்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கேட்கப்பட்ட போது, குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா்கள் அங்கன் வாடி மையங்களில் உள்ள காலியிடங்களில் ஊட்டச்சத்து நிறைவு காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பொது இடங்களில் இது போன்ற ஊட்டச்சத்து நிறைவு காய்கறி தோட்டம் அமைத்திட ஊரக வளா்ச்சி துறை மூலம் தரை சமன் பணி, தண்ணீா் வசிதி, வேலி அமைத்திடவும், பொதுமக்கள் பயன்படக் கூடிய வகைளில் இடம் தோ்வு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளவும் இகோரிக்கை வைக்கப்பட்டது.

தோட்டக்கலை துறை மூலம் விதைகள் மற்றும் பராமரிப்பு தொடா்பான ஆலோசனைகள் வழங்குமாறும்இ அவ்வறிவுரைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தனர்.

ஐ.சி.ஐ.சி.ஐ பவுன்டேசன், கே.வி.கே மற்றும் ஏகம் பவுன்டேசன் தொண்டு நிறுவனங்களில் விதைகள் தரமாக வழங்கிட ஆலோசனைகள் வழங்கியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மாநிலத்திலேயே  ”போஸன் மா” நிகழ்வுகளின் புகைப்படம் பதிவேற்றம் செய்து, அதில் தஞ்சை மாவட்டத்தினை முதல் இடத்தில் கொண்டு வந்தமைக்காக அனைத்து துறை அலுவலர்களுக்கும் தமது பராட்டினை தெரிவித்துள்ளார்கள். மேலும் சிறப்பான நிகழ்வுகளையும் பதிவேற்றம் செய்திட ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

கூடுதல் ஊட்டச்சத்து நிறைவு காய்கறி தோட்டம் அமைத்திட அங்கன்வாடி மையங்களை தோ்வு செய்திடவம் பொது இடங்களில் மக்கள் பயன் பெறும் வகையில் சமுதாய ஊட்டச்சத்து நிறைவு காய்கறி தோட்டம் அமைத்திட தேவையான இடத்தினை விரைவில் தேர்வு செய்துஇ மாவட்ட திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை அலுவலா்களுக்கு பட்டியல் அனுப்பிட அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கூட்டத்தின் நிறைவாக ஊட்டச்சத்து மாதமான செப்டம்பர் மாதத்தினை நமது மாவட்டத்தில் மேலும் சிறப்பாக செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர் அமித், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் ராஜ்குமார் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.