தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதனை, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் முகமது தலைமையில் நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை குறித்த மனுக்களை வழங்கினர்.
அம்மனுவில், "குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டிக் கொடுக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்பில், சொந்த வீடு, இடம் இல்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வீடுகள் வழங்கப்பட வேண்டும். தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்பட வேண்டும்.
மாதாந்திர உதவித் தொகைக்காக மனு கொடுத்து விட்டு காத்திருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கிட வேண்டும். அடையாள அட்டை இல்லாமல் இருக்கும், மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனே அடையாள அட்டை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், பேராவூரணி ஒன்றியத் தலைவர் வின்சென்ட் ஜெயராஜ், ஒன்றியச் செயலாளர் சுதாகர், திருவோணம் ஒன்றியத் தலைவர் திருமேனி, சேதுபாவா சத்திரம் ஒன்றியச்செயலாளர் ஜலீல் முகைதீன், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஜம் ஜம் அகமது அஸ்ரப் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.