.

Pages

Friday, September 4, 2020

அதிராம்பட்டினத்தில் சமூக இடைவெளியுடன் தொழுகை!

 ஏ.ஜெ நகர் ஜும்மா பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் சமூக இடைவெளியை கடைபிடித்த இஸ்லாமியர்கள்
அதிராம்பட்டினம், செப்.04
அதிராம்பட்டினத்தில் உள்ள பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

கோவில்கள், மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நிலையான இயக்க முறைகளின்படி, பொதுமக்கள் வழிபாடுகளுக்கு அனுமதிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து, அரசு அறிவித்திருக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றி, அதிராம்பட்டினத்தில் பெரிய ஜும்மா பள்ளிவாசல், புதுமனைத்தெரு முஹ்யித்தீன் ஜும்மா பள்ளிவாசல், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல், தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல், ஏ.ஜெ நகர் ஜும்மா பள்ளிவாசல், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை தவ்ஹீத் பள்ளிவாசல், சிஎம்பி லேன் மஸ்ஜித் தவ்பா,  மேலத்தெரு சானாவயல் மஸ்ஜித் அல் ஹிதாயா ஆகிய பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெற்றது. இதில், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து தொழுகையில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.