அதிரை நியூஸ்: செப்.04
தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று (04.09.2020) பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு செல்பவர்களை நேரில் சென்று வாழ்த்தி, அதிகமாக பிளாஸ்மா கொடை வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சிதலைவர் தெரிவித்தாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கும், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கொரோனா நோய்த்தொற்றால் தீவீர பாதிப்புக்குள்ளான 1.பாஸ்கர் வயது 57 2.ரமேஷ் வயது 58 ஆகிய இரண்டு நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை மேற்க்கொண்டதால் குணமடைந்து இன்று வீடு திரும்புகிறார்கள்
மேலும், நமது மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த 5918 பேரும் பிளாஸ்மா தானம் வழங்க முன் வரவேண்டும். மாவட்ட நிர்வாகமும் இவர்களை தொடர்புக் கொண்டு பிளாஸ்மா கொடை வழங்க ஊக்கப்படுத்தி வருகிறோம்.இது வரை 30க்கும் மேற்ப்பட்டோர் பிளாஸ்மா தானம் வழங்க பதிவு செய்துள்ளனர் இதில் 5நபர்கள் பிளாஸ்மா தானம் வழங்கியுள்ளனர் நீங்கள் வழங்கும் பிளாஸ்மா கொடை தீவீர தொற்றுள்ளவர்களை காப்பாற்ற உதவுகிறது எனவே பிளாஸ்மா தானம் வழங்கி பல உயிர்களை காப்பற்ற உதவவேண்டும்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமையில் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 7026 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 5918 நபர்கள் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைபவர்களின் சதவீதம் 84.2 ஆக உள்ளது. தற்போது 989 நபர்கள் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 1,31,750 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 4336 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, 2,03,113 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் கொரோனா நோய்த்தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டவர்களை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், அறிகுறி இல்லாமல் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கொரோனா சிகிச்சை மையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 9 வட்டங்களிலும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம் அணிதல், சமூக இடைவெளி பிடித்தல், கைகழுவுதல் மற்றும் இதர நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் மற்றும் மூச்சுத்திணறல் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் பரிசோதனை செய்யாமல் கவனக்குறைவுடன் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளை எளிதில் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அருகில் நடைபெறும் காய்ச்சல் கண்டறிய முகாம்கள் அல்லது அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
மூச்சுத்திணறல் சுவாசிப்பதில் சிரமம் மற்றும் கொரோனா நோய்த்தொற்றை கண்டறிய மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் பணியாளர்கள் நியமித்து அவர்களுக்கு 900க்கும் மேற்ப்பட்ட பல்ஸ் மீட்டர், தெர்மல் ஸ்கேனர் கருவி வழங்கப்பட்டு பரிசோதனைகள் தீவீரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோய் சிகிச்சை மேற்க்கொள்ள அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் அச்சப்படாமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் கொரோனா நோய்த்தொற்றிலுருந்து குணமடைந்த 1.பாஸ்கர் வயது 57 2.ரமேஷ் வயது 58 ஆகிய இரண்டு நபர்களும் கூறியதாவது எங்கள் உயிரைக்காப்பாற்றி எங்களுக்கு அனைத்து விதமான மருத்துவ வசதிகளும், சிகிச்சையும் ஏற்படுத்திக் கொடுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்வின்போது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொ) மருததுரை மற்றும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் அலுவலர்கள் உடனிருந்தார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.