.

Pages

Sunday, September 13, 2020

பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி நீட் தேர்வு மையத்தில், முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு (படங்கள்)


அதிராம்பட்டினம், செப்.13-
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள, புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில், நீட் தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர் சனிக்கிழமை மாலை ஆய்வு நடத்தினார். 

பட்டுக்கோட்டை பகுதியில் முதன் முறையாக நீட் தேர்வு எழுதும் மையமாக,  புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 540 மாணவ, மாணவிகள் (செப்.13) ஞாயிற்றுக்கிழமை, தேர்வு எழுத உள்ளனர். 

மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1.30 வரை தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். மாலை 5 மணிக்கு தேர்வு முடிந்து, 5.30 க்கு தேர்வர்கள் வெளியே வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சனிக்கிழமை மாலை, தேர்வு மையத்தில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர் ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்து அலுவலர்களிடம், தேர்வு மையத்தில் கிருமிநாசினி, கை கழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும். தேர்வர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தும், முகக்கவசம் அணிந்தும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். தேர்வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும்" என அறிவுறுத்தினார். 

ஆய்வின் போது, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சு.தரணிகா, பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். 





No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.