.

Pages

Friday, September 4, 2020

தஞ்சை மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற ஆட்சியர் அழைப்பு!

அதிரை நியூஸ்: செப்.04
தஞ்சாவூர் மாவட்டத்தில் விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளி, ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் பெற மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக நலத்துறையின் வாயிலாக 40 வயதிற்கு உட்பட்ட விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளி ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
     
விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்:       
1. வருமானச் சான்று நகல் ரூ.72,000/-த்திற்குள் இருத்தல் வேண்டும் (தாசில்தாரிடமிருந்து பெறப்பட வேண்டும்).

2. பிறந்த தேதிக்கான வயது சான்று நகல் அல்லது கல்வி சான்று நகல் வேண்டும் (வயது 20 முதல் 40 வரை இருத்தல் வேண்டும்)

3. விதவையாயின் அதற்கான சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெறப்பட வேண்டும்.

4. சாதிச் சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெற வேண்டும்.

5. கணவரால் கைவிடப்பட்டவராயின் அதற்கான சான்று நகல்  (தாசில்தாரிடமிருந்து) பெற வேண்டும்.

6. மாற்றுத் திறனாளியாயின் அதற்கான சான்று நகல் இணைக்கப்பட வேண்டும்.

7. தையல் தெரியும் என்பதற்கான சான்று நகல் (இணைக்கப்பட்ட வேண்டும்).

8. குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் 

9. பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் - 2 .

மேற்கண்ட ஆவணங்களுடன் அறை எண். 303, 3வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் நேரில் வந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.