.

Pages

Tuesday, September 1, 2020

அதிராம்பட்டினத்தில் பேருந்து சேவை தொடங்கியது (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்துகள் சேவை இன்று (01.09.2020 ) செவ்வாய்கிழமை காலை தொடங்கியது.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், இன்று 01.09.2020 முதல் மாநில அரசுப் பேருந்து போக்குவரத்து சேவையை தொடங்கலாம் என்று அரசின் அறிவிப்பை அடுத்து, அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் சேவை தொடங்கியது. பாயின்ட் டூ பாயின்ட் அரசுப் பேருந்தில் பட்டுக்கோட்டைக்கு பயணம் மேற்கொண்ட பயணிகள் அனைவருக்கும் சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்து, பின்பக்க படிக்கட்டுகள் மூலம் பேருந்தினுள் அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பயணிக்க அறிவுறுத்தப்பட்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.