அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்க கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப்பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு, மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த கல்வி நிறுவனங்களில் பெற்று கொள்ளலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று அதனை புதுப்பிப்பது நவம்பர் மாதம் 10-ந் தேதியும், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் நவம்பர் 30-ந் தேதிக்குள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அதில் மாணவர்கள் தங்களது வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் நவம்பர் மாதம் 15-ந் தேதியன்று கல்வி உதவித்தொகை இணைய தளத்தில், மாணவர்களின் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 15-ந் தேதிக்கு முன்பாக சமர்ப்பிக்கவேண்டும். இதேபோல் புதிதாக உதவி தொகை கோருபவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் டிசம்பர் 16-ந் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 31-ந் தேதிக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
அரசு இணைய தளமான www.tn.gov.in/bcmbcdept -ல் இத்திட்டங்கள் குறித்து விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.