அதிராம்பட்டினம், செப்.13
பட்டுக்கோட்டை அடுத்த புதுக்கோட்டை உள்ளூரில் இயங்கி வரும் பிரிலியன்ட் சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய தேர்வு முகமை நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்வு மையத்தினை பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர், காவல்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், வட்டாட்சியர் தர்ணிகா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், திருமதி பொய்யாமொழி, மாவட்ட கல்வி அலுவலர் ராமசுப்பு ஆகியோர் பார்வையிட்டனர்.
காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் முகாமிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர் தேர்வுக்கு வந்த மாணவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர். புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடாசலம் மற்றும் பட்டுகோட்டை வட்டார சுகாதார ஆய்வாளர் அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி மருத்துவ பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். இத்தேர்வினை பள்ளி முதல்வர் ரெஜிஸ் ராஜன், தலைமை ஆசிரியை சாண்ட்ரா தேசிய தேர்வு முகமை வழிகாட்டுதல்படி நடத்தினார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.