.

Pages

Wednesday, September 16, 2020

ZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 80-வது மாதாந்திரக் கூட்டம்!

அதிரை நியூஸ்: செப்.16
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 80-வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 11-09-2020 அன்று 4-வது முறையாக ZOOM-APP எனும் காணொளி மூலம் நடைபெற்றது. இந்நிகழ்வில், நமதூர் வாசிகள்  பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நிரல்:- 

கிராஅத்                 :  அப்துல் ரஹீம் ( உறுப்பினர் ) 
முன்னிலை           : S.சரபுதீன் ( தலைவர் ) 
வரவேற்புரை       : A. சாதிக் அகமது  ( இணைத்தலைவர் )
சிறப்புரை              :  A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல்  :  ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை      :  P. இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )

தீர்மானங்கள்:

1) அல்ஹம்துலில்லாஹ் எங்களது 80-வது கூட்டம் சிறப்பாக நடைபெற்று அதில் பல சேவைகளும் அதன் சிறப்புகளை பற்றியும் விவாதிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் காணொளி மூலம் கலந்து கொண்டு சிறப்பித்து அனைத்து சகோதரர்களுக்கும்  மற்றும் குறிப்பாக ஜித்தாவிலிருந்து ரியாத்திற்கு இடம் பெயர்ந்துள்ள சகோ.ஆபிதீன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

2) நமதூர்  பைத்துல்மாலின் மூலம் சிறப்பாக செயல்பட்டு வரும் தையற்பயிற்சி வகுப்புகள் நீண்டகால இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் 25-ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளதால், நமதூர் பெண்கள் மற்றும் மாணவிகளை இவ்வகுப்பிற்கு அனுப்பி அதனை கொண்டு பயனை அடைந்து கொள்ளுமாறும் அதற்காக முழு ஆதரவு நல்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

3) கல்வி உதவி தொகை-2020 எனும் திட்டத்தில் தொடர் படிப்பு, மருத்துவம், பொறியியல் தொழில்நுட்பம் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் கல்வி உதவி தொகை வழங்க முன் வந்ததற்காக ABM தலைமையகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டு இதன் மூலம் நமதூர் ஏழை மாணவர்கள் முழுவதுமாக பயனடையுமாறும் அதன் மூலம் நமதூர் சிறந்த கல்வியாளர்களை உருவாக்கும் திட்டத்தில் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) நமதூர் மாணவர்களுக்கு புதிய திட்டமாக கல்வி பயிற்சி வழங்குவதில் முன் வந்த நமதூர் தலைமையகத்திற்கு ஆதரவும் ஊக்கமும் நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

SPOKEN ENGLISH/ UPSC/ TNPSC /IIT/ CHARTERED ACCOUNT/ TOEFL/ IELTS/ IIM

மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி முகாமின் அறிமுக கூட்டத்தில் முழு ஒத்துழைக்குமாறு நமதூர் பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) அதிரை பைத்துல்மாலின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலவச டயாலிசில் சிகிச்சை திட்டத்திற்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும், பொருளாதார உதவியும் நல்குமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது

ABM-ன் மருத்துவ உதவி திட்டத்தின் அடிப்படையில் நமதூர் தகுதியுள்ள நோயாளிகளின் ABM-தலைமையகத்தை அணுகுமாறும் இதனை கொண்டு பாதிக்கப்பட்ட நபர்கள் பயனடைந்து கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) இக்கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இவர்களின் ஆகிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

(a) ரியாத் கிளையின் தலைவர் ஜனாப் சரபுதீன் அவர்களின் சகோதரி ஆலடித்தெரு தெருவை சேர்ந்த ஹாஜிமா ஜலீலா அம்மாள் அவர்களின் ஆகிரத்திற்காக துஆ செய்யப்பட்டது.

(b) மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி.A.பகுருதீன் ( ABM-ன் ஆரம்ப கால பொறுப்புதாரி ) பொதுசேவகர் இவர்களின் ஆகிரத்திற்காக துஆ செய்யப்பட்டது.

7) இன்ஷா அல்லாஹ் அடுத்த 81-வது அமர்வு OCTOBER மாதம் 9-ம் தேதி, நேரம், இடம் பின்னர் அறிவிக்கப்படும் அதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால்  ரியாத் கிளை


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.