மத்திய மாநில அரசுகளில் தொழிலாளர்கள் விரோத சட்டத்திருத்ததை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதிராம்பட்டினம் கடைத்தெரு முக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு, ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.எச் பசீர் அகமது, கே.பிச்சமுத்து, இ.முகமது பாருக், எஸ். மீரா சாகிப், எம். சுப்பிரமணியம், அப்துல் முனாப், எஸ்.ஜாஹிர் உசேன், ஜெ.அப்துல் கபூர், எஸ்.சிக்கந்தர் பாதுஷா, எம்.காதர் பாட்சா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க வேண்டாம், தொழிலாளர் சட்டங்களை நீக்குவது, வேலை நேரத்தை, 12 மணி நேரமாக அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கை, 2020ஐ திரும்பபெற வேண்டும். ரத்து செய்யப்பட்ட, பி.எஸ்.என்.எல்., டெண்டரை உடனே வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.