தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை மதிப்பு கூட்டுதல் பொருட்கள் தொடர்பான மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் நேரில் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள பரக்கலக்கோட்டை காவியா கயறு, தொழிற்சாலை மற்றும் பழவேறிகாடு பட்டுக்கோட்டை கயறு தயாரிக்கும் குழுமம் மற்றும் வீரக்குறிச்சி PAS நார் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியவற்றில் தேங்காய் உரிமட்டையிலிருந்து தென்னை நார் கட்டி மற்றும் இதர பொருட்கள் தயாரிக்கும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் (22.09.2020) அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தென்னையில் மதிப்பு கூட்டுதல் பொருட்கள் ஏறக்குறைய 38000 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் பட்டுக்கோட்டை, சேதுபாசத்திரம், பேராவூரனி, ஓரத்தநாடு ஆகிய வட்டாரங்களில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது, தென்னையில் தேங்காய் நீங்கலாக இதர உபபொருட்கள் தயாரிப்பு தொடர்பான ஆய்வு மாவட்ட ஆட்சியரால் மேற்கொள்ளப்பட்டது.
தேங்காய் உரிமட்டையில் இருந்து தேங்காய், நார், தென்னை நார், கட்டி ஆகியவை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இயங்கும் விதம் உற்பத்தி ஆகியவை தொடர்பான ஆய்வு மாவட்ட ஆட்சியரால் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாயின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது:
தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் பல்வேறு பொருட்களிலிருந்து மதிப்பு கூட்டி விற்பனை செய்வதால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் மேலும் தென்னையிலிருந்து வெர்ஜின் எண்ணெய், தேங்காய் தூள், சிப்சு, நீரா போன்ற மதிப்பு கூட்டுதல் பொருட்கள் தயாரிக்கலாம்.
மேலும், தஞ்சை மாவட்டத்தில் தென்னை அதிக அளவில் பயிரிடப்படுவதால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு தென்னை மதிப்புகூட்டு மையம் ஒன்று பட்டுக்கோட்டை பகுதியில் சுற்று வட்டாரங்களில் அமைக்கலாம் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை அலுவலர்கள் மாவட்ட தொழிற்சாலை அலுவலர்களிடம் மேற்கொள்ளப்பட்டு, பணிகளை விரைந்து செயல்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார்.
இவ்வாய்வில், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் சீ.பாலச்சந்தர், வேளாண்மை துணை இயக்குனர் பி.மரியாரவி ஜெயக்குமார், வேளாண் வணிகம் சுரேஸ்பாபு தொழில் கூட்டுறவு பிரிவு உதவி இயக்குனர் ஜி.விஜயகுமார், வேளாண் அலுவலர் சிவகாமி, கண்கணிப்பாளர் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.