.

Pages

Friday, August 2, 2013

துபாயில் முதன் முறையாக TIYA நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி ! [ புகைப்படங்கள் ]

ன்று [ 02-08-2013 ] வெள்ளிக்கிழமை  மாலை  டேரா துபாய் ஹம்ரியா லேடிஸ் பார்க்கில் அமீரகத்தில் இயங்கி வரும் அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் [ TIYA ] சார்பாக மேலத்தெரு மஹல்லாவாசிகளின் பங்களிப்போடு இஃப்தார் நிகழ்ச்சி முதன் முறையாக இனிதே நிறைவேறியது.

வந்திருந்த அனைவரையும் TIYA வின் அமீரகத்தலைவர் அப்துல் மாலிக், செயலாளர் நூர் முஹம்மது [ நூவண்ணா ], பொருளாளர் அப்துல் காதர் உள்ளிட்ட சக நிர்வாகிகள் அனைவரும் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

இஃப்தார் உணவுக்காக அதிரையின் பிரத்தியேக சுவையுடன் கூடிய நோன்புக்கஞ்சியுடன் கடப்பாசி,பிரியாணி,சமூசா, பழவகைகள், ஜூஸ் ஆகிய உணவுப்பொருட்கள் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மஹல்லாவாசிகள் கலந்து கொண்டு இஃப்தார் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.















செய்தி தொகுப்பு & புகைப்படம் :துபையிலிருந்து அதிரை மெய்சா

5 comments:

  1. நீண்ட நாட்களுக்கு பிறகு நம்மவர்களை சிறப்பானதொரு நிகழ்ச்சியின் மூலம் புகைப்படத்தில் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது !

    அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அமீரக TIYA வின் முதல் இப்தார் நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள்.பெரும்பாலான ஊர்கள் சார்பில் அமீரகத்தில் இப்தார் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டுயிருக்கும் நேரத்தில் அதிரையின் சார்பில் ஏற்பாடு இல்லாதது வருத்தமாக இருந்த நேரத்தில் அதிரையர்களின் ஒரு அங்கமான TIYA வின் இப்தார் ஏற்பாடு வரவேற்க்கத்தக்கது.இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் அதிரையின் அனைத்து முஹல்லாஹ் சார்பில் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து சகோதரத்துவ நல்லிணக்கத்தோடு கருத்து வேறுபாடுகளை மறந்து அதிரையர்கள் அனைவரும் செயல் பட வேண்டும்.TIYA-வின் முன்முயற்சி அதற்கான அடித்தளமாக அமையும்.நிர்வாகிகள் மாலிக் காக்கா,சகோ நூர் முஹம்மத்(நூவன்னா), சகோஅப்துல் காதர் மற்றும் TIYA உறுப்பினர்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
    ------------------
    இம்ரான்.M.யூஸுப்
    மக்கள் தொடர்பு செயலாளர்
    அமீரக சமூகநீதி அறக்கட்டளை

    ReplyDelete
  3. நீண்ட நாட்களுக்கு பிறகு நம்மவர்களை சிறப்பானதொரு நிகழ்ச்சியின் மூலம் புகைப்படத்தில் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது !

    அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. உறவுகள் மற்றும் நண்பர்களை காண மிகவும் மகிழ்ச்சி

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.