.

Pages

Tuesday, July 1, 2014

தஞ்சை எம்பி பரசுராமனின் கோரிக்கையில் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் குறித்து குறிப்பிடாததால் அதிரையர் அதிர்ச்சி !

விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே தொடர்பான கோரிக்கைகளை தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கே. பரசுராமன் ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடாவை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து மனுவை அளித்துள்ளார். இதுகுறித்த செய்தி இன்றைய தினமணியில் இடம்பெற்றுள்ளது.  இதில் தஞ்சை தொகுதியில் உள்ள தம்பிகோட்டை, அதிராம்பட்டினம், ராஜாமடம், புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம், பட்டுகோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் பயனுறும் வகையில் நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் தொடர்பான கோரிக்கை இந்த மனுவில் இடம்பெறாதது அதிரையர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலில் அதிரையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் தொடர்பாக வேட்பாளரிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை எம்பி கு. பரசுராமனின் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :
தஞ்சாவூர் - சென்னை இடையே அதிவிரைவு ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். தில்லி - தஞ்சாவூர் இடையே புதிய ரயில் சேவையைத் தொடங்க வேண்டும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மன்னார்குடி - ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மன்னார்குடிக்கு பதிலாக திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வழியாக இயக்கலாம்.

திருச்சியிலிருந்து ஹெளரா வரை செல்லும் ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சிக்குப் பதிலாக வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கலாம். நெல்லை - திருச்சி இடையிலான இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில் சேவையை தஞ்சாவூர் வரை நீட்டிக்க வேண்டும். தஞ்சாவூர் ரயில் சந்திப்பில் காலை முதல் மாலை வரை நிறுத்தப்பட்டிருக்கும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலை தஞ்சாவூர் - சேலம் இடையே விரைவு ரயிலாக இயக்க வேண்டும்.

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை இடையிலான அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர் ஆகிய பகுதிகளில் பயணிகள் முன்பதிவு மையங்களைத் தொடங்க வேண்டும். தஞ்சாவூர் - அரியலூர் இடையே அகல ரயில் பாதைத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். தஞ்சாவூர் - திருச்சி இடையிலான இரட்டை அகல ரயில் பாதைத் திட்டம், திருச்சி - காரைக்கால் இடையே மின்சார ரயில் திட்டப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் பூதலூர் ரயில் நிலையத்திலும், காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் பூதலூர், நீடாமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், ராமேசுவரம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.

5 comments:

  1. நமது ஊர் பெருமக்கள் முறையாக சென்று. mp இடம் நமது அகலபதை குறித்து கோரிக்கை வைக்கவும்.

    ReplyDelete
  2. யார் வந்தாலும் திருவாரூர் காரைக்குடி அகலப்பாதை பணிக்கு முயற்சி செய்யப்போவதில்லை நமது ஊரை பொறுத்தமட்டில் யாரும் ஒற்றுமையுடன் செயல் பட போவதில்லை வாயாலும் நெட்டிலும் சொல்லி கொண்டிருக்க வேண்டியதுதான்

    ReplyDelete
  3. இன்னும் 5 வருஷத்துக்கு பெரிய பட்டை தான்

    ReplyDelete
  4. வேறு எதுக்கு இவரு பதவிக்கு வந்தாரு?

    ReplyDelete
  5. Why anybody not tried to advice him to impose the minister regarding the thiruvaroor karaikkudi broadguage rout before he met the railway minister?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.