நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலில் அதிரையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் தொடர்பாக வேட்பாளரிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை எம்பி கு. பரசுராமனின் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :
தஞ்சாவூர் - சென்னை இடையே அதிவிரைவு ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். தில்லி - தஞ்சாவூர் இடையே புதிய ரயில் சேவையைத் தொடங்க வேண்டும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மன்னார்குடி - ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மன்னார்குடிக்கு பதிலாக திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வழியாக இயக்கலாம்.
திருச்சியிலிருந்து ஹெளரா வரை செல்லும் ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சிக்குப் பதிலாக வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கலாம். நெல்லை - திருச்சி இடையிலான இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில் சேவையை தஞ்சாவூர் வரை நீட்டிக்க வேண்டும். தஞ்சாவூர் ரயில் சந்திப்பில் காலை முதல் மாலை வரை நிறுத்தப்பட்டிருக்கும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலை தஞ்சாவூர் - சேலம் இடையே விரைவு ரயிலாக இயக்க வேண்டும்.
தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை இடையிலான அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர் ஆகிய பகுதிகளில் பயணிகள் முன்பதிவு மையங்களைத் தொடங்க வேண்டும். தஞ்சாவூர் - அரியலூர் இடையே அகல ரயில் பாதைத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். தஞ்சாவூர் - திருச்சி இடையிலான இரட்டை அகல ரயில் பாதைத் திட்டம், திருச்சி - காரைக்கால் இடையே மின்சார ரயில் திட்டப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் பூதலூர் ரயில் நிலையத்திலும், காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் பூதலூர், நீடாமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், ராமேசுவரம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.
நமது ஊர் பெருமக்கள் முறையாக சென்று. mp இடம் நமது அகலபதை குறித்து கோரிக்கை வைக்கவும்.
ReplyDeleteயார் வந்தாலும் திருவாரூர் காரைக்குடி அகலப்பாதை பணிக்கு முயற்சி செய்யப்போவதில்லை நமது ஊரை பொறுத்தமட்டில் யாரும் ஒற்றுமையுடன் செயல் பட போவதில்லை வாயாலும் நெட்டிலும் சொல்லி கொண்டிருக்க வேண்டியதுதான்
ReplyDeleteஇன்னும் 5 வருஷத்துக்கு பெரிய பட்டை தான்
ReplyDeleteவேறு எதுக்கு இவரு பதவிக்கு வந்தாரு?
ReplyDeleteWhy anybody not tried to advice him to impose the minister regarding the thiruvaroor karaikkudi broadguage rout before he met the railway minister?
ReplyDelete