அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாமினை நடத்தியது.
ஞாயிறு அன்று ஊராட்சி ஒன்றிய (கிழக்கு) தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு லயன்ஸ் சங்கத்தலைவர் பொறியாளர் ஏ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வர்த்தக சங்கத்தலைவர் பி.எஸ்.அப்துல்லா குத்துவிளக்கேற்றினார். பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் எஸ்.சுப்பையா முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இம்முகாமில் கண்புரை நோய், சர்க்கரை நோய், கண்நீர் அழுத்த நோய், குழந்தைகள் கண் நோய், மாறுகண், மாலைக்கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட கண் நோய்களுக்கு, நிபுணர்கள் பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனை வழங்கினர். புறநோயாளிகளாக மொத்தம் 353 பேர் பரிசோதனை செய்து கொண்டனர் . இதில் கண் அறுவை சிகிச்சைக்கு 130 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர். சுமார் 100 பேருக்கு இலவசமாக மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அறுவைசிகிச்சை, உள் விழி லென்ஸ், மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து மற்றும் மறு பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது.
லயன்ஸ் நிர்வாகிகள் கே.பி.நல்லசாமி, வி.எம்.டி.தமிழ்செல்வன், ஈ.வி.காந்தி, பொறியாளர் கனகராஜ், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாட்டினை லயன்ஸ் சங்கத்தலைவர் பொறியாளர் ஏ.ராமகிருஷ்ணன், செயலாளர் கே.குட்டியப்பன், பொருளாளர் ஆர்.குமார் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
செய்தி மற்றும் படம்:
எஸ்.ஜகுபர்அலி, பேராவூரணி.

இலவச கண் மருத்துவ முகாமில் இலவச வியாபர விளம்பரம், மார்கெட் போட்சுன்னா இப்படி ஊர் ஊர் இலவச சிறப்பு முகாம் நடத்தி பிறகு மக்களிடம் அதிக தொகை கரக்குறாங்க.
ReplyDelete