.

Pages

Sunday, November 9, 2014

அதிரை மீன் மார்க்கெட்டில் வாளை மீன்கள் வரத்து அதிகரிப்பு ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதே போல் அருகில் உள்ள மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது பனி சீசன் துவங்கியுள்ளதால் மீனவர்களின் வலைகளில் வாளை மீன்கள் அதிகளவில் பிடிபடுகின்றன. இந்த மீன்கள் அதிரை மீன் மார்க்கெட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகிறது. அதிக ருசியுடைய இந்த மீன்களை அதிகமான வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர். சிறிய ரக வாளை ₹  150 முதல் ₹ 200 வரையும், பெரிய ரக வாளை ₹  200 முதல் ₹ 250 வரையும் விற்பனையானது.
  

2 comments:

  1. வாழை மீன்கள் உடன் கெடும் தன்மை உடையது ஆகவே இதை செவிளின் சிகப்பு நிறத்தை வைத்து வாங்கவேண்டும் மேலும் வெட்டும்போது அதன் முள்ளின் அமைப்பிற்கு தகுந்தாற்போல் வகுந்து வெட்டவேண்டும் இல்லையேல் சாப்பிடும்போது அதன் முற்களை எடுக்க கடினமாக இருக்கும் .எல்லா மீன்களையும் புளி ஊற்றித்தான் ஆக்குவோம் ஆனால் இந்த வாளைமீனை புளிக்கு பதிலாக கொஞ்சம் தேங்காய்பால் ஊற்றி ஆக்கி பாருங்கள் ....அதன் சுவையே தனி தான் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.