இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அஜ்மல்கான் நம்மிடம் கூறியதாவது...
'எங்கள் பகுதியின் குடியிருப்பு பகுதியில் காணப்படும் கழிவு நீர் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பால் சாலையில் கழிவு நீர் வெளியாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தபட்டோரிடம் எடுத்துச்சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் இந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் நோக்கில் சாலையோரத்தில் போடப்பட்ட பொது குடிநீர் பைப் உடைந்து காணப்படுகிறது, இதிலிருந்து குடிதண்ணீர் வீணாக சாலை முழுவதும் வழிந்து ஓடுகிறது. இவற்றை பிளாஸ்டிக் பையால் சுற்றி தண்ணீர் வழிந்து ஓடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
களத்திலிருந்து நூவன்னா








தினமும் எதாவது பேரூர் நிர்வாகத்தின் குறைகள் தான் பார்க்க முடிகிறது, நிர்வாகம் செத்து போச்சா? சொல்லுமளவுக்கு இருந்தா கொஞ்சம் எழுதுங்களேன்!
ReplyDelete