இதுகுறித்து 'சமூக ஆர்வலர்' KMA ஜமால் முஹம்மது நம்மிடம் கூறியதாவது...
'கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டுக்குள கரையில் அதிரை பேரூராட்சியின் சார்பில் அதிரையில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக கூடுதலாக போர்வெல் அமைத்து இதற்கு பம்பிங் ரூம் கட்டி இங்கிருந்து நேரடியாக பைப் மூலம் மேடான பகுதிகளுக்கு நேரடியாக குடிநீர் விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டது.
இதில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் பம்பிங் கட்டிடம் அஸ்திவாரம் பலமாக இல்லாததால் அப்போதே இதுகுறித்து இந்த பணியை எடுத்து நடத்திய காண்ட்ராக்டர், கட்டுமான ஊழியர்கள் கவனத்துக்கு எடுத்துச்சென்றேன். தற்போது காட்டுக்குளத்தில் ஆற்று நீர் நிரப்பட்டு போதுமான தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மேட்டின் கரையில் உள்ள பம்பிங் கட்டிடம் மெதுவாக சரிந்து கீழே விடக்கூடிய அப்பாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
அதிரை பேரூராட்சி நிர்வாகம் எவ்வித லாப நோக்கமின்றி பொதுநல நோக்கில் செயல்படும் தகுதியான நபர்களிடம் கட்டுமான பணிக்குரிய டெண்டர்களை ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற நிகழ இருக்கும் விபத்துகளை தவிர்க்க முடியும். கட்டுமானத்தின் போது தரமான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா ? என்பதையும், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி பணிகள் நடந்ததா என்பதையும் அவ்வபோது நடத்தும் ஆய்வுகள் மூலம் அறிந்துகொண்டால் இதுபோன்று தரமற்ற கட்டுமானங்களை தவிர்க்கலாம்.
மேலும் சாலைக்கும், குளத்திற்கும் எவ்வித தடுப்புகள் இல்லாத காரணத்தினால், குளத்தை ஆர்வத்துடன் பார்வையிட துடிக்கும் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர் சிறுமிகள், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் குளத்தை ஒட்டிய மேட்டில் நடந்து செல்வதோ அல்லது குளத்தை பார்வையிட எட்டி பார்ப்பதையோ தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் அனைவரின் பார்வையில் படும்படி அப்பகுதியில் 'எச்சரிக்கை பலகை' வைப்பது வாகன விபத்தை தவிர்க்க உதவும்' என்றார்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இந்த இடத்தில் 2014-ஜனவரி மாத-வாக்கில் குடிநீருக்கான ஆழ் துளை கிணறு அமைக்கப்பட்டது, 2014-பிப்ரவரி-மார்ச் மாத-வாக்கில் பம்பிங் ரூம் கட்டி முடித்தார்கள், குடி தண்ணீர் எடுத்துச் செல்லும் பி.வி.சி. குழாய்களும் அந்த நேரத்தில் பொருத்தப்பட்டன.
இதன் பணி மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களின் தரம் தன்மைகள் குறித்து சம்பத்தப்பட்டவர்களின் கவனத்திற்கு அப்பவே நான் எடுத்துச் சென்றேன். யாரும் கண்டு கொள்ளவில்லை.
இப்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது, இந்த வடகிழக்கு பருவ மழைக்கு தாங்குமா?
இதன் மதிப்பு 5.80 இலட்சம் ரூபாய்கள்.
இந்த பணத்தை வைத்து சிறியதாக ஒரு வீடு கட்டி முடிக்கலாம், அல்லது 60X40-க்கு பெரிய வீடாக இருந்தால் தரை மட்டத்திற்கு மேல் உயர்த்தி விடலாம், அல்லது ஒரு நல்ல பெட்டிக்கடை வைத்து பிழைத்துக் கொள்ளலாம், மேலும் பல நல்ல வழிகளுக்கு பயன் படுத்தலாம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
எல்லா அரசு வேளைகளில் அதிகாரிகள் கமிசனை எதிர்ப்பார்ப்பதால் contractor commission கொடுக்க வேண்டியருக்குது, எப்படி தரமான பொருளை வாங்கி கட்டுவார்கள்? கமிசன் கிடைத்ததால் வேலை சரியா செய்யப் பட்டதா என்று கூட அதிகாரிகள் கவனிப்பதில்லை, தன் தவறை மறைக்க அதிகாரிகள் உடனே மண்ணை போட்டு சரிபன்னிவிடுவார்கள், நீங்களே பார்க்கலாம்!
ReplyDeleteபேரூராட்சி நிர்வாக சீர்கேட்டை பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும், வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டி விட்டு கொள்ளையடிக்கும் அதிகாரிடமும் அரசியல் வியாதிடம் நாம் மாட்டிக் கொண்டோம்!