.

Pages

Sunday, November 9, 2014

அதிரையில் ரோட்டரி சங்கம் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் !

அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நமதூர் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 09-11-2014 காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்றது. இதில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

முன்னதாக முகாமை அதிரை பேரூராட்சி துணைத் தலைவர் பிச்சை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியை ரோட்டரி சங்க நிர்வாகிகள் கஜேந்திரன், அபூதாஹிர், முஹம்மது தமீம் உள்ளிட்ட ஏனைய ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் ஹாஜா பகுருதீன், அப்டா முகம்மது தமீம், உதயகுமார் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். முகாமில் கலந்துகொண்டோருக்கு காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள் வேண்டிய உதவியை செய்தனர்.

செய்தி மற்றும் படங்கள் :
கே.கே யூசுப்

2 comments:

  1. பொது நலம் கருதி உழைத்த அனைருக்கும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  2. Haஜா வனடபோச்சே

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.