.

Pages

Thursday, November 6, 2014

அதிரை அருகே மீனவர்கள் உண்ணாவிரதம் !

அதிரையை அடுத்த சேதுபாவாசத்திரத்தில், மரணதண்டணை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் வாடும் அப்பாவி தமிழக மீனவர்கள் ஐந்து பேரை விடுவிக்க வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.
       
ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் உள்ளிட்ட ஐந்து தமிழக மீனவர்களை கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களை கைது செய்த இலங்கை அரசு போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டி சிறையில் அடைத்தது. கடந்த அக்டோபர் 30 ந்தேதி இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
         
இது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மீனவர்கள் ஐந்து பேரையும் உயிரோடு மீட்க வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீனவர்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், வேலை நிறுத்தப்போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.அண்மையில் தஞ்சை மாவட்ட மீன்பிடி தொழிலாளர் (சிஐடியு ) சங்கம் ஆர்ப்பாட்டம், ராஜபக்‌ஷே உருவபொம்மை எரிப்பு என ஆர்ப்பாட்டம் நடத்தியது.
           
மீனவர்களை உயிரோடு மீட்க வலியுறுத்தி தஞ்சை, திருவாரூர் மாவட்ட விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் சங்கங்கள் சார்பில் வியாழன் அன்று சேதுபாவாசத்திரத்தில் பட்டுக்கோட்டை சாலை சத்திரம் முன்பு உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலச்செயலாளர் ஏ.தாஜூத்தீன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்டத்தலைவர் ஏ.ராசமாணிக்கம், மாவட்டச்செயலாளர் கே.வடுகநாதன், நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் அதிரை எஸ்.சுப்பிரமணியன், நாட்டுப்படகு மீனவர் சங்க  திருவாரூர் மாவட்டச்செயலாளர் எம்.இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மரணதண்டணை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள அப்பாவி தமிழக மீனவர்கள் ஐந்து பேரையும் உயிருடன் மீட்கவும் , இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படம்: 
எஸ்.ஜகுபர்அலி, பேராவூரணி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.