.

Pages

Wednesday, November 12, 2014

கீழே சாய்ந்து விழும் அபாய நிலையில் பிலால் நகர் குடியிருப்பின் முதல் மின்கம்பம் !

அதிரை மின்சார வாரிய எல்லைக்குட்பட்ட பகுதி பிலால் நகர். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பாக புதிதாக உருவாகிய இந்த பகுதியில் குடியிருப்புகள் வரத் துவங்கியது. இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல் குடியிருப்பு வந்தபோது குடியிருப்புதாரர் செலவில் சொந்தமாக போடப்பட்ட மின்கம்பம் தற்போது மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதன் அடிப்பகுதி மிகவும் வலுவிழந்து கீழே சாய்ந்து விழுகின்ற அபாய நிலையில் இருப்பதால் மின்கம்ப இணைப்பில் உள்ள அனைத்து குடியிருப்புதாரர்களும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க இந்த பகுதியில் புதிதாக மின்கம்பம் அமைத்து தர மின்சார வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


6 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    நான் நேரில் சென்று பார்த்த போது இந்த மின் கம்பம் பெரிதும் ஆபத்தான ‎நிலையில் உள்ளது, அப்பகுதி மக்கள் மனதில் ஒரு வித பீதியும் அச்சமும் ‎நிலவுகிறது, காரணம்; எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம், முதல் ‎கட்டமாக அதிரை மின் வாரிய அதிகாரி AE அவர்களிடம் முறையாக ‎எடுத்துச் சொல்ல வேண்டும். துரித நடவடிக்கை எடுக்க காலம் ‎தாமதித்தால் இந்த விஷயம் உயர் அதிகாரிகள் மட்டத்திற்கு துரிதமாக ‎பறந்து போகும்.‎

    அதிரையை ஒரு அலசு அலசினால் இன்னும் இதுபோல் நிறைய ‎குறைகளை கண்டுபிடிக்கலாம். அந்த மாதிரி பொதுமக்களின் மெத்தன ‎போக்கும், அதிகாரிகளின் அலட்ச்சியப் போக்கும் அம்பலமாகி வருகின்றது, ‎இப்படியே விட்டு விட்டால் எவ்வளவு தூரம் போகமுடியும்?‎

    பொது மக்க்களே............!!!!!!!!!!>????????????? ‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. ஊரில் எத்தனையோ பேர்கள் தன்னை சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொண்டு விளம்பர பிரியர்களாக ஆகிவரும் சூழலில் ஜமால் காக்கா அவர்களின் கூடுதல் கவனம் நமதூர் மின் வாரியத்தின் பக்கம் செலுத்தி ஊருக்கு நல்லது செய்வது பாராட்டுக்குரிய செயல் ..வாழ்க உங்கள் மக்கள் பனி .

    ReplyDelete
  3. ஒரு கல்லில் இரண்டு மாங்கா என்று சொல்லுவது போல மின் வாரியத்தின் அலட்சியத்தை பாருங்கள் என்று மின் கம்பத்தை காட்டுவதும் பேரூர் நிலைமை என்னவன்று குப்பைஏய் சுட்டிகாட்டுவது போல இருக்கு படம். சிறு பலன் எதிர்பாராமல் செய்யும் உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை எனலாம் - வாழ்த்துக்கள்

    இருந்தாலும் அக்டிங் சூப்ப்பர் முதல் படத்தில்....

    ReplyDelete

  4. ஒரு கல்லில் இரண்டு மாங்கா என்று சொல்லுவது போல மின் வாரியத்தின் அலட்சியத்தை பாருங்கள் என்று மின் கம்பத்தை காட்டுவதும் பேரூர் நிலைமை என்னவன்று குப்பைஏய் சுட்டிகாட்டுவது போல இருக்கு படம். சிறு பலன் எதிர்பாராமல் செய்யும் உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை எனலாம் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Thank you for immediate action kakka.

    ReplyDelete
  6. ஜமால் காக்காவின் பொதுச் சேவை மிகவும் பாராட்டப் படவேண்டியவை. எனக்கு மட்டுமல்ல பொதுவாக அதிகமாக ஊரில் மின்சாரப் பிரச்சனை சாயும் நிலையிலுள்ள மின்கம்பம் என்று கேள்விப் பட்டால் ஜமால் காக்காவின் ஞாபகம் தான் வருகிறது.

    தொடரட்டும் உங்களின் சேவைப் பணி கைகொடுப்போம் நாம் அனைவரும் அப்பணிக்கு !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.