.

Pages

Friday, November 7, 2014

ஜி.கே.வாசனுடன் அதிரை ஆதரவாளர்கள் சந்திப்பு ! [ படங்கள் இணைப்பு ]

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியைத் துவக்கியுள்ள ஜி.கே. வாசன், சென்னையில் இன்று இளைஞர் அணியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் புதிய கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பட்டுக்கோட்டை தொகுதி அதிரையை சேர்ந்த, இவரது ஆதரவாளர்கள் அதிரை மைதீன், கார்த்திகேயன், நூர் முஹம்மது, ராஜேந்திரன், நாசர், சாஜித் ஆகியோர் நேரடியாக சென்னை சென்று ஜி.கே வாசனை அவரது அசோக் நகர் அலுவலத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்பொழுது அங்கு இருந்த ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், யுவராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள்.

1 comment:

  1. கடந்த ஆட்சியில் காங்கிரஸ்சில் கப்பல் ஒட்டிய மேஸ்திரி கப்பலை கவுத்துவிட்டு எமெர்சென்சி எக்ஷிட் வழியாக தப்பி வந்து முதலாளியாக ஆசைப்பட்டு சாதிக்கபோகிறார்? சொந்த கட்சிக்கே சோதனை காலத்தில் இருந்து தாங்கிகொல்லாமல் நன்றிகடன் இல்லாமல் துரோகம் செய்துவிட்டு எப்படி தனிக்கட்சி நடத்தி அகில இந்திய காங்கிரசை பின்னுக்கு தள்ளமுடியும். வாசனின் திறமையை இடைபோட்டுதான் அவரால் காங்கிரசுக்கு எந்த பயனும் இல்லை என்று கண்டுகொள்ளவில்லை. பாரிளிமென்ட் தேர்தலில் போட்டியிட மறுத்த வாசன் ஒரு பஞ்சயாத்து தேர்தலில் நின்று மக்கள் செல்வாக்கை பெற்று நிருப்பிக்க தேர்தல் களத்தில் தனித்து நிற்கமுடியுமா? திராவிட கட்சியுடன் சேர்ந்து சவாரி செய்ய ஆசைப் படுகிறார்! வலிமையான பாரதம் மோடின் தலைமைலா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.