முத்துப்பேட்டை அடுத்து ஜாம்புவான்னோடையில் அமைந்துள்ள தர்ஹாவிற்கு சில தினங்களுக்கு முன்பு கேரளா மலப்புரத்தை சேர்ந்த தம்பதியர் அப்துல்லா குட்டி ( வயது 62 ), இவரது மனைவி ஹதிஜா ( வயது 52 ) வந்திருந்தார்.
நேற்று முன்தினம் தம்பதியர் அருகில் உள்ள ஆற்றாங்கரை தர்ஹாவில் ஒய்யு எடுத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே வந்த வாலிபர்கள் தங்களை கேரளாவை சேர்ந்தவர் என தம்பதியிடம் அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
பின்னர் தர்ஹா அருகில் உள்ள குடியிருப்பில் சிறப்பு தொழுகை நடைபெற இருப்பதாக அழைப்பு விடுத்தனர். இதை நம்பிய தம்பதியர் அங்கே சென்றனர். அப்பொழுது இருவருக்கும் மயக்க மருந்து கலந்த குளிர் பானம் கொடுத்தனர். அதை அப்துல்லா குட்டி மாட்டும் குடித்தார். ஹதீஜாவுக்கு குளிர்பானம் பிடிக்காததால் டீ வாங்கி அதிலும் மயக்க மருந்தை கலந்து கொடுத்தனர். இதில் இருவரும் மயங்கி விழுந்தனர்.
மயக்கம் தெளிந்து பார்த்தபோது ஹதீஜா அணிந்திருந்த 4 பவுன் நகை, பேக்கில் வைத்திருந்த 10 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவை திருடப்பட்டிருந்தது. தகவலறிந்த முத்துப்பேட்டை போலீசார் தர்ஹாவிற்கு வந்து தம்பதியிடம் விசாரித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 2 வாலிபர்களையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.