.

Pages

Monday, November 3, 2014

கொடும்பாவி எரிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையை அடுத்த சேதுபாவாசத்திரத்தில் தஞ்சை மாவட்ட மீன்பிடி தொழிலாளர் (சிஐடியு) சங்கத்தின் சார்பில், இலங்கை நீதிமன்றத்தால் பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் மரணதண்டணை விதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழக மீனவர்கள் ஐந்து பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அதிபர் மகேந்திர ராஜபக்‌ஷே கொடும்பாவியை மீனவர்கள் தீவைத்து எரித்தனர்.
         
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மீன்பிடி தொழிலாளர் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் பெரியண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மீன்பிடித்தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஊராட்சி மன்றத்தலைவர் எம்.சமயமுத்து, சிஐடியு மீனவர் சங்க நிர்வாகிகள் காரங்குடா கிருஷ்ணமூர்த்தி, நிஜாம் முகைதீன், மாரிமுத்து, செந்தில்குமார், ஜாகிர் உசேன், முருகன், ஏ.வீரப்பன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
                 
சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மீனவர்கள் ஊர்வலமாக சென்று அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட, இலங்கை அதிபர் மகேந்திர ராஜபக்‌ஷே கொடும்பாவியை தீவைத்து எரித்தனர். மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சேதுபாவாசத்திரம் வர்த்தக சங்கம் சார்பில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.
           
"இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 82 படகுகளை மீட்டுத்தரவேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் மரணதண்டணையை எதிர்நோக்கி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழக மீனவர்கள் ஐந்து பேரையும் உயிரோடு மீட்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநில அரசு தலையிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும்" என வலியுறுத்திய மீனவர்கள் இலங்கை அரசை கண்டித்தும், சுப்பிரமணியசாமியை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இலங்கை சிறையில் மரணதண்டணையை எதிர்நோக்கி உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி விசைப்படகுகள் , நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி மற்றும் படங்கள் :
எஸ்.ஜகுபர்அலி 
பேராவூரணி.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.