.

Pages

Monday, November 3, 2014

மதுக்கூரில் தற்கொலை செய்த அ.தி.மு.க தொண்டர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதிஉதவி அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கினார் !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அ.தி.மு.க. தொண்டரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவியை அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கினார்.

ஜெயலலிதா கைது செய்யப்பட்டதால் மிகவும் மனமுடைந்து காணப்பட்ட மதுக்கூரை சேர்ந்த வ. பெரமையன் (வயது 26). வீட்டு மாடியில் இருந்து குதித்து மரணமடைந்தார். இந்த சம்பவம் குறித்து தெரியவந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தற்கொலை செய்து கொண்ட பெரமையன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். அதன்பேரில், தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான வைத்திலிங்கம், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இன்று மதுக்கூர் மோகூரில் உள்ள பெரமையன் வீட்டிற்கு சென்றார். நிதி உதவி அங்கு அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் ரூ.3 லட்சம் நிதி உதவிக்கான காசோலையையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, பரசுராமன் எம்.பி., தஞ்சை மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதா ரவிச்சந்திரன், மாவட்ட பால் கூட்டுறவு தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், அதிமுக மதுக்கூர் ஒன்றிய செயலாளர் துறை செந்தில், மாவட்ட அம்மா பேரவை தலைவர் தண்டாயுதபாணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அதிமுக மதுக்கூர் நகர செயலாளர் முஹம்மது செரீப், ஊராட்சி மன்ற தலைவர் அய்யாவு, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கோவி. பாலசுப்பிரமணியன், அதிமுக மோகூர் ஊராட்சி செயலாளர் நாராயணசாமி உள்பட அ.தி. மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள் :
நூவன்னா









1 comment:

  1. என்னமோ இவங்க ஜெயிலுக்கு போனதால எல்லாம் செத்துட்டாங்க மாதிரி சொல்றாங்க.... உண்மையா சொல்லப்போனால் உங்களுடைய கொள்ளையை நினைத்து அவமானப்பட்டு தான் தற்கொலை செய்து கொண்டு இருப்பார்கள்.... எம்ஜியார் வளர்த்த அதிமுக இப்படிப்பட்ட ஒரு கும்பலால் நாசமாகிறதே என்று கூட தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம்.

    தமிழ்நாட்டை ஆழ ஒரு தமிழனை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாதா? தமிழா ஊழல்வாதிகளின் பின்னே செல்வதை தவிர்த்துவிடு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.