முத்துப்பேட்டை அடுத்த ஜாம்பவானோடையில் உள்ள தர்ஹாவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச்சேர்ந்த அப்துல்லா குட்டி(62), அவருடைய மனைவி ஹதீஜா(52) ஆகிய இருவரும் பிராத்தனை செய்வதற்காக வந்து இருந்தனர்.
மேலும் அப்துல்லா குட்டி சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இந்த தர்ஹாவிற்கு மாதம் ஒரு முறை அல்லது இருமுறை வந்து இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி போன்ற இதர பொருட்களை கொண்டு வந்து வியாபாரமும் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த அப்துல்லா குட்டி மற்றும் அவரது மனைவி ஹதீஜா ஆகியோர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஆற்றாங்கரை தர்ஹாவில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே வந்த 25 மற்றும் 30 வயது கொண்ட இரண்டு மர்ம இளைஞர்கள் இந்த தம்பதினரிடம் தானும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் தான் என்று கூறி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
பின்னர் தர்ஹா அருகில் உள்ள அப்துல் ரஜாக் என்பவரது குடியிருப்பில் தங்கி உள்ளதாகவும் அங்கே சிறப்பு பிரார்த்தனைச் செய்ய இருப்பதாகவும் கூறி அப்துல்லா குட்டி தம்பதினரை அழைத்துள்ளனர். அவர்களும் மர்ம இளைஞர்கள் தங்கிருந்த அப்துல் ரஜாக் குடியிருப்புக்கு சென்று அங்குள்ள ஒரு அறைக்கு சென்றுள்ளனர். அப்பொழுது அந்த மர்ம இளைஞர்கள் இருவருக்கும் மயக்கம் மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதனை அப்துல்லா குட்டி மட்டுமே குடித்துள்ளார். பிறகு ஹதீஜாவுக்கு குளிர்பானம் பிடிக்காது என்பதால் அருகில் உள்ள கடையில் டீ வாங்கி அதிலும் மயக்கம் மருந்து கலந்து கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இதனை சாப்பிட்ட அப்துல்லா குட்டி மற்றும் அவரது மனைவி ஹதீஜா ஆகிய இருவரும் மயங்கி விழுந்தனர். பிறகு நீண்ட நேரம் கழித்து மயக்கம் தெளிந்ததும் எழுந்து பார்த்த பொழுது அந்த மர்ம இளைஞர்களை காணவில்லை. மேலும் ஹதீஜா அணிந்திருந்த 4 பவுன் நகைகள் மற்றும் பேக்கில் வைத்திருந்த 10 ஆயிரம் ரொக்க பணமும், தனது செல்போன் ஆகியவையும் திருட்டு போயிருப்பதைக் கண்டு தம்பதியினர் கதறி அழுதனர். பின்னர் தகவல் அறிந்து தர்ஹா நிர்வாகத்தினர் தம்பதியினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பறிக்கொடுத்த அப்துல்லா குட்டி கூறுகையில்...
30 வருடமாக இந்த தர்ஹாவிற்கு வருகிறேன், இதுவரை எந்த சம்பவமும் நடக்க வில்லை. அதனால் அந்த இளைஞர்கள் கூறியதை நம்பி ஏமாந்து நடுத்தெருவில் நிற்கிறேன். வியாபாரம் செய்ய வேண்டிய தொகையையும் இழந்து விட்டேன். இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். காவல் துறையினர் தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதறி அழுதார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.