.

Pages

Friday, November 7, 2014

கடற்கரை தெரு கந்தூரி தொடர்பாக TNTJ அதிரை கிளையினர் காவல் நிலையத்தில் புகார் !

கடற்கரை தெரு கந்தூரி எதிர்வரும் 21-11-2014 அன்று கொடிமரம் நடும் விழா நிகழ்ச்சியும் 23-11-2014 அன்று கந்தூரி ஊர்வலமும், இதை தொடர்ந்து 03-12-2014 அன்று சந்தனக்கூடு விழா ஆகியன நடைபெற இருப்பதாக கந்தூரி விழா குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று இரவு TNTJ அதிரை கிளையின் நிர்வாகிகள், அதிரை காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.

மனுவை பெற்று கொண்ட காவல்துறை ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள், இதுதொடர்பாக விரைவில் இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும், இதில் TNTJ அதிரை கிளை நிர்வாகிகளை கலந்துகொள்ளமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மனு அளிப்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட பிராசாரகர் அன்வர் அலி, கிளை நிர்வாகிகள் பீர் முஹம்மது, M.I. அப்துல் ஜப்பார், AKS நவாஸ், ஹாஜி முஹம்மது, சுலைமான், இப்ராஹீம் ஆகியோர் காவல் நிலையம் சென்றனர்.

2 comments:

  1. இப்போவெல்லாம் ஸ்மார்ட் போன் வச்சுக்கிட்டு இருப்பவங்கள பாருங்க அவங்க எந்நேரமும் சோசியல் நெட்வொர்க் சொல்லி எல்லா அக்கிரமத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டு தான் இருக்காங்க இதெல்லாம் தடுக்க எந்த போலீஸ் ஸ்டேஷன் போக முடியும்? தியேட்டரில் படம் பார்த்தா கேவலம் ஆனா யூடுபில் பார்த்தா......?

    கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்று சொல்லுவதை போல இந்த சந்தன கூடும் அப்படி தான் இருக்கு.. காலம் மாறும் போது தன்னால மறைந்து போகும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.