கடந்த 4–ந் தேதி வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த அர்ஷத்கானை திடீரென காணவில்லை. இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுவனை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்ததை தொடர்ந்து கடத்தப்பட்ட சிறுவனின் இல்லத்திற்கு இன்று நமதூர் சேது ரோட்டை சேர்ந்த சமூக ஆர்வல இளைஞர் காலித் அஹமது, நேரடியாக சென்று நலம் விசாரித்துவிட்டு, சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்துள்ளார்.
சந்திப்பு குறித்து 'காலித் அஹ்மது' நம்மிடம் கூறியதாவது...
சிறுவன் காணமால் போனது தொடர்பாக அதிரை பிறையில் செய்தி வெளியிட்டுருந்தோம். சிறுவன் கிடைத்த தகவலை குடும்பத்தினர் எங்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் இல்லத்திற்கு நேரடியாக சென்று நலம் விசாரித்துவிட்டு, சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினேன் என்றார்.

திருச்சியில் கடந்த 4ம் தேதியன்று தென்னூர் பகுதியை சேர்ந்த ஹர்சத்கான் என்ற 2 வயது சிறுவன் மாயமானதாகவும் அதனை அதிரை பிறையில் செய்தியாக பதிந்து உதவிடுமாறும் அன்றைய தினம் அச்சிறுவனுடைய தந்தையின் நண்பர் நம் தளம் நிர்வாகி நூருல் அஹமது அவர்களை தொடர்புகொண்டு தெரிவித்தார்.
ReplyDeleteஇதனை அடுத்து அது நம் தளத்தில் வெளியிடப்பட்டு புகைப்படம் முகநூலில் பகிரப்பட்டது. இச்செய்தியை தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளவர்கள் முகநூலிலும் வாட்ஸ் ஆப்பிள் போன்ற சமுக வலைதளங்களில் பகிந்தனர்.
இதனை அடுத்து நேற்று நம் நிர்வாகி நூருல் அவர்களை தொடர்பு கொண்டு குழந்தை கடத்தப்பட்டதாகவும் அதை கடத்தியது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெனிபர் என்ற பெண் என்று தெரிவித்தார். இதனை அடுத்து இன்று அக்குழந்தையின் தந்தை நம்மை தொடர்புகொண்டு நேரில் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து நமது தளம் நிர்வாகி காலித் அகமது அவர்கள் குழந்தையின் இல்லம் சென்று அக்குடும்பத்திற்க்கும் குழந்தைக்கும் ஆறுதல் கூறினார்.
இச்செய்தியை பதிந்த அதிரை நியூஸ் இணையதளத்திற்கு எங்களின் தளம் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
வீடியோ பார்க்க...
https://www.youtube.com/watch?v=TR8nKePCQck&feature=youtu.be
This comment has been removed by the author.
ReplyDeleteகுழந்தைக் கடத்தல் நாளுக்குநாள் பல ஊர்களிலும் அரங்கேறத் தொடக்கி விட்டன. ஆகவே பெற்றோகள் குழந்தைகள் வீட்டில் தான் இருப்பார்கள் என்று கவனிக்காமல் அலட்சியமாக இருந்துவிடாமல் எப்போதும் குழந்தைகள் மேல் கவனம் கொள்வது பாதுகாப்பாக இருக்கும் முடிந்தவரை குழந்தைகளை பிறரிடம் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
ReplyDelete