கடந்த சில வருடங்களாக பன்றிகளின் நடமாட்டம் இல்லாமல் இருந்து வந்தது. அதிரை பேரூராட்சி நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தது. தற்போது பன்றிகளின் வரத்து மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதியினர் கருதுகின்றனர்.
அதேபோல் தெரு நாய்களின் வரத்தும் தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக பேருந்து நிலையபகுதிகளில் காலை நேரங்களில் அதிகமாக நாய்கள் தென்படுகின்றன. நாய்களை பிடித்து கொல்வது என்பது இப்போது தடை செய்து விட்டதால் யாருமே நாய்களைப் பிடித்துச் செல்வதில்லை. இதன் காரணமாக நாய்கள் பெருகி காணப்பட்டு வந்தது. தெருவுக்கு பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றிவருகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் பன்றிகளின் நடமாட்டத்தையும், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பது நகரை தூய்மையாக வைத்திருக்க நினைக்கும் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. இதுவிசயத்தில் அதிரை பேரூர் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு பன்றிகள்- நாய்கள் புழக்கத்தை தடுத்து நிறுத்துவது அவசியமாக இருக்கிறது.

.jpg)












பாதாள சாக்கடை திட்டம் இருந்தால் தான் சாக்கடை வெளியில் ஓடாது. சுத்தமான கழிப்பறை இருந்தால் தான் சிறுநீரும், மலமும் வெளியில் நாறாது. திடக்கழிவு மேலாண்மையும், கட்டமைப்பும் இருந்தால் தான் குப்பை மேடு சேராது, இது நம்மவூரில் பார்க்க எத்தனை காலம் போக வேண்டும்? சாத்தியக் கூறு குறைவு தான் அது சரி இந்த பன்றிகளை வளர்ப்பது யாரு ....பேரூர் நிர்வாகமே, அதாவது துப்புரவு தொழிலாளர்கள், இவர்களிடம் தான் முரைஇடனும்.
ReplyDeleteபடத்தில் விலங்குகளை நடிக்கவைத்தால் வணவதைப்பு சட்டம் பாயும் மற்றும் சங்கங்கள் கேஷ் போடும், ஆனா அனாதையாக திரியும் நாய்கள் பற்றி கவலைப் படமாட்டார்கள், என்னமோ இந்த நாய்கள் எல்லாம் பேரூருக்கு எதிராக கூக்குரலிடுகிறது - புரிந்தால் சரி தான்.
நாயே கண்டா கள்ள காணோம் கல்ல கண்டா ....