.

Pages

Saturday, November 8, 2014

அதிரையில் பெருகி வரும் தெரு நாய்கள் - பன்றிகளை கட்டுப்படுத்துமா பேரூராட்சி நிர்வாகம் ?

அதிரையில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகள், குப்பைக்கழிவுகள், தேங்கி நிற்கும் கழிவு நீர் ஆகிய இடங்களில் பன்றிகளின் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 3 வது வார்டு பகுதிகளில் பன்றிகள் பிள்ளை குட்டிகளோடு சுற்றித்திரிகின்றன. தற்போது மழைகாலமாக இருப்பதால் பன்றிகளால் கிளறப்படும் கழிவுகள் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக பன்றிகளின் நடமாட்டம் இல்லாமல் இருந்து வந்தது. அதிரை பேரூராட்சி நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தது. தற்போது பன்றிகளின் வரத்து மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதியினர் கருதுகின்றனர்.

அதேபோல் தெரு நாய்களின் வரத்தும் தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக பேருந்து நிலையபகுதிகளில் காலை நேரங்களில் அதிகமாக நாய்கள் தென்படுகின்றன. நாய்களை பிடித்து கொல்வது என்பது இப்போது தடை செய்து விட்டதால் யாருமே நாய்களைப் பிடித்துச் செல்வதில்லை. இதன் காரணமாக நாய்கள் பெருகி காணப்பட்டு வந்தது. தெருவுக்கு பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றிவருகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் பன்றிகளின் நடமாட்டத்தையும், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பது நகரை தூய்மையாக வைத்திருக்க நினைக்கும் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. இதுவிசயத்தில் அதிரை பேரூர் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு பன்றிகள்- நாய்கள் புழக்கத்தை தடுத்து நிறுத்துவது அவசியமாக இருக்கிறது.

1 comment:

  1. பாதாள சாக்கடை திட்டம் இருந்தால் தான் சாக்கடை வெளியில் ஓடாது. சுத்தமான கழிப்பறை இருந்தால் தான் சிறுநீரும், மலமும் வெளியில் நாறாது. திடக்கழிவு மேலாண்மையும், கட்டமைப்பும் இருந்தால் தான் குப்பை மேடு சேராது, இது நம்மவூரில் பார்க்க எத்தனை காலம் போக வேண்டும்? சாத்தியக் கூறு குறைவு தான் அது சரி இந்த பன்றிகளை வளர்ப்பது யாரு ....பேரூர் நிர்வாகமே, அதாவது துப்புரவு தொழிலாளர்கள், இவர்களிடம் தான் முரைஇடனும்.

    படத்தில் விலங்குகளை நடிக்கவைத்தால் வணவதைப்பு சட்டம் பாயும் மற்றும் சங்கங்கள் கேஷ் போடும், ஆனா அனாதையாக திரியும் நாய்கள் பற்றி கவலைப் படமாட்டார்கள், என்னமோ இந்த நாய்கள் எல்லாம் பேரூருக்கு எதிராக கூக்குரலிடுகிறது - புரிந்தால் சரி தான்.

    நாயே கண்டா கள்ள காணோம் கல்ல கண்டா ....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.