.

Pages

Friday, January 16, 2015

பத்துக்காட்டில் மதரஸா மாணவ மாணவிகள் பங்கேற்ற மார்க்க அறிவுத்திறன் நிகழ்ச்சி !

அதிரை அடுத்துள்ள பத்துக்காடு கிராமத்தில் இஸ்லாமிக் அசோசியேஷன் சார்பில் மதரஸா மாணவ மாணவிகள் பங்கேற்ற மார்க்க அறிவுத்திறன் மற்றும் 4 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நேற்று 15-01-2015 வியாழக்கிழமை பத்துக்காடு ஜும்மா பள்ளி வாசல் வளாகத்தில் துவங்கியது.

நிகழ்ச்சிக்கு பத்துக்காடு ஜமாத் தலைவர் ஹாஜி எம். அஹமது ஹிதாயத்துல்லஹ் தலைமை வகிக்க, ஜமாத் நிர்வாகிகள் எஸ்ஏ.சேக்தாவூது, எம்ஏ சேக் அப்துல்லா, M.K.A.சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியில் கிராஅத் ஏ. இஷாக் அகமது வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மல்லிபட்டினம் ஐக்கிய ஜமாத் தலைவர் தாஜுதீன், பத்துக்காடு  ஜும்மா பள்ளி வாசல் இமாம் மௌலவி எம் நஸ்ருல்லா பைஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக வரவேற்புரை கரிசவயல் இஸ்லாமிக் அசோசியேஷன் பொருளாளர் ஏ பரக்கத்துல்லா ஆற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பத்துக்காடு  ஜும்மா பள்ளி வாசல் இமாம் மௌலவி எம்.முஹம்மது முஹ்யித்தீன் பைஜி தொகுத்து  வழங்கினர். முடச்சிக்காடு பள்ளி இமாம் மௌலவி ஏ. முகம்மது ஹசன் பைஜி மற்றும் அரசர் குளம் பள்ளி இமாம் பி. அப்துல் வாஹித் பைஜி ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை  நடத்தினர்.

இதையடுத்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இவற்றை கரிசவயல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் ஏஎம்என்.அப்துல் ஷக்கூர் ரஹ்மானி வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் கரிசவயல் இஸ்லாமிக் அசோசியேசன் செயலாளர் கே. முகமது சுபைர் நன்றியுரை ஆற்றினார்.

2 comments:

  1. இவர்கள் தான் இலஞ் சமுதாய தூண்கள், அவர்களின் அறிவுத்திறனை அல்லாஹ் மேலும் மெருகூட்டுவானாக! ஆமின்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.