அதிரை அடுத்துள்ள தொக்காலிக்காடு கிராமத்தில் மஹாராஜா சமூத்திர அணைக்கட்டு பகுதியின் அருகே கிராம நிர்வாக எல்லைக்குட்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் நரி, நாய், உடும்பு, கீரி, பாம்பு, முயல் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான மயில்களும் வசித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று அதிகாலையில் அப்பகுதியில் ஆண் மயில் ஒன்று வலது காலில் அடிபட்டு இரத்த கசிவுடன் உயிருக்கு போராடி வந்தது. அப்பகுதி வழியே சென்ற விவசாயி சுரேஷ் மயிலின் காலில் காயம் ஏற்பட்டதை அறிந்து தொக்காளிகாடு கிராம ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த வனத்துறை அலுவலர் சங்கரலிங்கம், வனவர் ரவிக்குமார், வனக்காப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த மயிலை மீட்டு சிகிச்சைக்காக அதிரை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். மருத்துவமனையில் கால்நடை உதவி மருத்துவர் ராஜிவி சிகிச்சை அளித்தார். இதன் பிறகு செருவாவிடுதியில் உள்ள வன சூழலியல் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மயில் வலை கம்பியில் சிக்கி அடிபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

.jpg)

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.