.

Pages

Monday, January 5, 2015

முத்துப்பேட்டை கலவரத்திற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை: கருப்பு மறுப்பு !

முத்துப்பேட்டை தர்கா புத்தாண்டு அன்று சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பா.ஜ.க மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவது பா.ஜ.க மற்றும் இந்து இயக்கங்களின் மரபல்ல. இன்றைய தினம் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்திருக்கிற பத்திரிகை அறிக்கையில் முத்துப்பேட்டை தர்கா காம்பவுண்ட் சுவர் சேதப்படுத்தப்பட்டது தொடர்ப்பாக அதனை சேதப்படுத்தியது பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியின் செயல் என்றும், இது பா.ஜ.க உள்ளுர் பிரமுகரின் ஆதரவோடு நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்சியின் தலைவர் அறிக்கை கொடுக்கும்போது உண்மை நிலையை அறிந்து கொடுப்பது அவசியமாகும். இதுவே சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்தும் செயலாகவும் இருக்கும். ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவது பா.ஜ.க மற்றும் இந்து இயக்கங்களின் மரபல்ல இது ஆங்கிலேயர்களால் துவக்கப்பட்ட இயக்கத்தின் மரபு. எங்களுக்கு அதுபோன்ற வழக்கமோ பண்பாடோ கிடையாது இன்று அங்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாடியதில் எங்களுடையை நிர்வாகிகள் ஒரு நபர் கூட கிடையாது. அந்த புத்தாண்டு கொண்டாடத்திற்கு ஏற்பாடு செய்தது அ.தி.மு.க வினர். அதில் கலந்துக்கொண்டதில் முக்கியமானவர்கள் காங்கிரஸ் கட்சியினர். இதை காவல் துறையும் மக்களும் நன்கு அறிவார்கள் ஆனாலும் கூட காவல்துறை சில தீவிரவாத இயக்கத்தின் அச்சுறுத்தலுக்கு பயந்து அப்பாவிகளை கைது செய்வது, எங்கள் இயக்கத்தினர் மீது பொய் வழக்கு பதிவு செய்வது போன்ற ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். காவல்துறை ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை உடனடியாக கைவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு தர்கா காம்பவுண்ட் சுவர் சேதப்படுத்தப்பட்டதற்கும், இந்துக்களின் மூன்று கார்களும், மூன்று டூவிலர்களை சேதப்படுத்தப்பட்டதற்கு காரணமான இருதரப்பையும் சேர்ந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். மேலும் முத்துப்பேட்டை தர்கா காம்பவுண்ட் சுவர் சேதப்படுத்தப்பட்டதற்கும் எங்கள் இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இந்த சம்பவத்தை கட்சி வண்மையாக கண்டிக்கிறது இவ்வாறு தனது அறிக்கையில் கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

2 comments:

  1. பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது ........
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே என்று கருடன் சொன்னது. அவரவர் வேலை பார்த்தால் பிரச்னை கிடையாது, அரசியல் ஆதாயத்துக்காக மக்களை தூண்டிவிட்டு பதவிக்கு வருவது நாடறிந்தது.

    கடைந்தெடுங்கப்பட்ட அயோக்கியர்களின் கூடாரமாக அரசியல் ஆகிவிட்டது, உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும்.

    ReplyDelete
  2. இந்த கண்டங் கருவாலே கருப்பு சொல்வதெல்லாம் உண்மையா? ‎செய்தவன் என்றைக்காவது செய்ததை ஒத்துக்கொண்டது உண்டா?‎

    இஸ்லாமியர்களை எப்படி சீண்டினால் சண்டைக்கு வருவார்கள், ‎அவர்களோடு எப்படி கலவரத்தை ஆரம்பிப்பது போன்ற சிந்தனையில் ‎உள்ளவன் தான் இப்படி ஒரு மோசமான செயலில் ஈடுபட்டிருப்பான், ஈடு ‎பாடவும் துணையாக இருந்திருப்பான்.‎

    இப்படி தர்காவின் சுவரை நடு ராத்திரி நேரத்தில் தாக்கி இருப்பது, வெளிக் ‎கொடியில் தொங்க விடப்பட்ட இஸ்லாமியர்களின் சட்டையை கிழித்தது ‎மாதிரி இருக்கின்றது. இதை கடுமையாக கண்டித்து குற்றவாளிகளை ‎பிடித்து தகுந்த தண்டனையை வாங்கிக் கொடுக்க வேண்டும்.‎

    ஹிந்துவோ, முஸ்லிமோ, ஒருத்தருக்கொருத்தர் சகோதரர்களாக வாழ்ந்து ‎கொண்டிருகும்போது இப்படியா?‎

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.