இவர் குறித்த செய்தி கடந்த [ 05-01-2015 ] அன்று 'தோள் கொடுப்போம் நம்ம ஹஜரத்துக்கு ! என்ற தலைப்பில் அதிரை நியூஸில் பதிவிடப்பட்டது. இந்த பதிவை பார்வையிட்ட பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வரும் பாசமிகு மாணவர்கள் பலர் இவரது உடல் நிலை குறித்து அலைப்பேசியில் வாயிலாகவும், இவரது இல்லத்திற்கு நேரடியாக சென்றும் நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை நமதூர் செக்கடி மேடு நண்பர்கள் ஹஜரத்தை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக முத்துப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றனர். அங்கு ஹஜரத்தை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு, ஒரு சிறு தொகையை உதவியாக அவரிடம் வழங்கினார்கள். நிதிஉதிவியை பெற்றுக்கொண்ட ஹஜரத் இவர்களுக்காக துஆ செய்தார். அப்போது முத்துப்பேட்டை வசிக்கும் 'சமூக ஆர்வலர்' சுனா ஈனா என்கிற சுல்தான் இப்ராஹீம் அவர்கள் உடனிருந்தார்.
சந்திப்பின் போது அதிரையிலிருந்து மருத்துவர் ஹனீப் அவர்களின் புதல்வர் மருத்துவர் ஹாஜா ஷரீப் அவர்கள் அலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஹஜரத்தின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.






பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்யட்டும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
பள்ளியில் படித்த மாணவர்கள் நம்ம ஹஜரத்தை நினைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை சிலரை நான் சந்திக்கும்பொழுது தெரிந்தது.
ReplyDelete" நீதி போதனையில் மார்க்கம் பற்றி மட்டும் பேசாமல் மூட பழக்கத்தையும் பற்றி பேசுவார்"
"நல்லா படித்தால் A / C ல் உட்கார்ந்து வேலைப்பார்ப்பை என்று சொன்னது காதில் ஒலிக்கிறது"
"வீடு கட்டினால் கூட் அடுத்தவங்களுக்கு இடையூர் இருக்ககூடாது என்று போதித்தது"
இப்படி நல்ல நல்லக் கருத்துக்களை மாணவர்களுக்கு அன்று எத்திவைத்தவை இன்றும் மாணவர்கள் மறக்கவில்லை என்பதை காணமுடிந்தது. அல்லாஹ் அவருக்கு நீண்ட ஆயூளை கொடுப்பானாக - ஆமின்.
எம் ஐ (நீதி போதனை ) வகுப்பு என்றாலே துள்ளிக் குதித்து ஹஜரத் இருக்கும் இடத்தில் முதல் வரிசையை பிடிப்போம் . காரணம் அவர்களுடைய பாசம் , பேச்சு அல்லாஹ் நீண்ட ஆயுளை அவர்களுக்கு கொடுப்பானாக ஆமீன் .
ReplyDelete