.

Pages

Wednesday, January 7, 2015

செக்கடி மேடு நண்பர்கள் ஹஜ்ரத்தை சந்தித்து நலம் விசாரிப்பு !

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1984 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை 24 ஆண்டுகள் மாணவர்களுக்கு 'நீதி போதனையை' கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் என்.எஸ் ஜமால் முஹம்மது ( வயது 74 ). 'ஹஜரத்' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர்.

இவர் குறித்த செய்தி கடந்த [ 05-01-2015 ] அன்று 'தோள் கொடுப்போம் நம்ம ஹஜரத்துக்கு ! என்ற தலைப்பில் அதிரை நியூஸில் பதிவிடப்பட்டது. இந்த பதிவை பார்வையிட்ட பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வரும் பாசமிகு மாணவர்கள் பலர் இவரது உடல் நிலை குறித்து அலைப்பேசியில் வாயிலாகவும், இவரது இல்லத்திற்கு நேரடியாக சென்றும் நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை நமதூர் செக்கடி மேடு நண்பர்கள் ஹஜரத்தை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக முத்துப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றனர். அங்கு ஹஜரத்தை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு, ஒரு சிறு தொகையை உதவியாக அவரிடம் வழங்கினார்கள். நிதிஉதிவியை பெற்றுக்கொண்ட ஹஜரத் இவர்களுக்காக துஆ செய்தார். அப்போது முத்துப்பேட்டை வசிக்கும் 'சமூக ஆர்வலர்' சுனா ஈனா என்கிற சுல்தான் இப்ராஹீம் அவர்கள் உடனிருந்தார்.

சந்திப்பின் போது அதிரையிலிருந்து மருத்துவர் ஹனீப் அவர்களின் புதல்வர் மருத்துவர் ஹாஜா ஷரீப் அவர்கள் அலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஹஜரத்தின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்யட்டும்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. பள்ளியில் படித்த மாணவர்கள் நம்ம ஹஜரத்தை நினைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை சிலரை நான் சந்திக்கும்பொழுது தெரிந்தது.
    " நீதி போதனையில் மார்க்கம் பற்றி மட்டும் பேசாமல் மூட பழக்கத்தையும் பற்றி பேசுவார்"
    "நல்லா படித்தால் A / C ல் உட்கார்ந்து வேலைப்பார்ப்பை என்று சொன்னது காதில் ஒலிக்கிறது"
    "வீடு கட்டினால் கூட் அடுத்தவங்களுக்கு இடையூர் இருக்ககூடாது என்று போதித்தது"

    இப்படி நல்ல நல்லக் கருத்துக்களை மாணவர்களுக்கு அன்று எத்திவைத்தவை இன்றும் மாணவர்கள் மறக்கவில்லை என்பதை காணமுடிந்தது. அல்லாஹ் அவருக்கு நீண்ட ஆயூளை கொடுப்பானாக - ஆமின்.

    ReplyDelete
  3. எம் ஐ (நீதி போதனை ) வகுப்பு என்றாலே துள்ளிக் குதித்து ஹஜரத் இருக்கும் இடத்தில் முதல் வரிசையை பிடிப்போம் . காரணம் அவர்களுடைய பாசம் , பேச்சு அல்லாஹ் நீண்ட ஆயுளை அவர்களுக்கு கொடுப்பானாக ஆமீன் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.