தற்கால இளைஞர்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் இருக்குதோ
இல்லையோ, ஓட்டுவதற்கு வாகனம் இருக்குது, அந்த அளவுக்கு கால்களும் துறுதுறுவென உருவாகி
இருப்பது மிகப் பெரிய முன்னேற்றம், அப்போ பெரியவர்கள் என்ன ஒழுங்கா என்றால் ஒரு
சில/பல பெரியவர்களும் அப்படித்தான்.
அன்று வீட்டுக்கு ஒரு வாகனம் அதாவது இருசக்கர மிதி வண்டி இருப்பதே
பெரிய அபூர்வமாக இருக்கும். யாராவது அதை ஓட்டிக்கொண்டு
போறதைப் பார்த்தால் நம்முடைய கால்களுக்கும் துறுதுறுவென இருக்கும், அந்த அளவுக்கு
இந்த இருசக்கர மிதி வண்டி அபூர்வமாக இருந்தது.
மிதி வண்டியை ஓட்டப் பழக ஒரு ஐந்து ஆறு பேர் கொண்ட நண்பர்கள்
குழுவாக இருப்பார்கள், கால் வண்டி, அரை வண்டி, முக்கால் வண்டி, முழு வண்டி இப்படி
வயதிற்கேற்ப ஓட்டிப் பழகுவதற்கு வண்டிகள் இருக்கும். 1968 களில் நமதூர்
கடைத்தெருவில் பரீதா சைக்கிள் கடை, எல்சம் சைக்கிள் கடை, எஸ்.எச்.சைக்கிள் கடை, இவர்களிடம்
வாடகைக்கு சைக்கிளை எடுத்து ஓட்டுவோம், ஒரு மணி நேரத்திற்கு வாடகை பத்து காசுகள்
மட்டும்தான்.
பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கின்ற காலத்தில் ஆசிரியர்களைத்
தவிர மற்ற யாவரிடமும் மிதி வண்டி இருக்காது, ஏதோ ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள்
மிதி வண்டிகளில் வருவார்கள்.
அன்று எந்த வேலையாக இருந்தாலும் நடந்தே செல்வோம்,
வெள்ளிகிழமை ஜும்மாவுக்குக் கூட நடந்தே செல்வோம். 1980களில் அதிரையில்
T.V.S.50 என்ற நூதனமான வாகனம் ரூபாய் 4500/=க்கு அறிமுகம்
ஆனது, ஒரு சிலரே ஓட்டி வந்தனர். காலம் மெல்ல மெல்ல நகர்ந்து போக, வீட்டுக்கு ஒரு
வாகனம் என்ற நிலை போய், இப்போது ஆளுக்கு ஒரு வாகனம் என்றாகி, வீட்டுக்கு பல
வாகனங்கள் இருக்கின்றன.
இன்றைய வாலிபர்களும் சரி, பெரியவர்களும் சரி நடக்க அலுப்பு
பட்டு எதுகெடுத்தாலும் வாகனம், தொட்டதுக்கெல்லாம் வாகனம், ஏன் திரும்பி பார்பதற்கு
கூட வாகனம் என்ற நிலைக்கு தள்ளப்பட்துள்ளனர்.
மேலும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை வாகனங்களை மாற்றி
வருகின்றனர், இவர்களுக்கு ஏற்ப வாகன கம்பெனிகளும் நூதனமான முறையில் விளம்பரங்களை
கொடுத்து அதிகப்படியான பணத்தை வசூலித்து வருகின்றனர். ஏமாறுவது பொது மக்களே.
வாகனம் ஓட்டுவதற்கு பல விதிமுறைகள் இருந்தாலும் அதை யாரும் கடைபிடிப்பதோ
மதிப்பதோ அறவே கிடையாது.
பள்ளியில் படிக்கும் வாலிபர்களுக்கு ஒரு வேகம், கல்லூரியில்
படிக்கும் வாலிபர்களுக்கு ஒரு வேகம், ஒரு வேலையும் இல்லாமல் வீட்டிலே சும்மா
இருக்கும் வாலிபர்களுக்கு ஒரு வேகம், இப்படி ஆளாளுக்கு இஷ்டப்படி ஒரு வேகத்தை
வைத்துக்கொண்டு பறந்து செல்கின்றனர். வீட்டில் உள்ள குடும்பத்தார்களிடம் போய் முறையிட்டால்,
எங்கள் பையன் அப்படி இல்லையே, ஒரு குறையும் தவறும் இல்லாமல் ஒழுங்காகத் தானே இருக்கின்றான்
என்று சொல்கிறார்கள். பள்ளியிலும், கல்லூரியிலும் போய் முறையிட்டால், அப்படியா
அவனுக நால்லாத்தானே இருக்கின்றாங்கள், எந்த ஒரு தப்பும் செய்யலையே என்று
சொல்கிறார்கள். வீடும் பயிலும் இடம். இவை இரண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தில்தான்
மிகப் பெரிய தவறுகள் நடந்து கொண்டே இருக்குது. அப்படியானால் இவர்களை யார்
கண்டிப்பது? இந்த விஷயத்தில் பொதுமக்கள் தலையிட்டால் மிகப் பெரிய தீர்வு காணலாமே!!??
அன்று ஒருநாள் மாலை சரியாக மணி ஏழு இருக்கும், நானும் என்
நண்பர் கருங்குளத்தைச் சேர்ந்த திரு.உலகநாதன் அவர்களும் எவர் கோல்டு கட்டிட
வளாகத்தில் நின்று உரையாடிக்கொண்டு இருந்தோம், அந்த நேரத்தில் பதினேழு, பதினெட்டு
வயது மதிக்கத்தக்க மூன்று வாலிபப் பையன்கள் ஹீரோ ஹோண்டாவில் அப்படியே மின்னல்
வேகத்தில் வந்து திரும்பினர், அவர்களை வழிமறித்து விசாரித்ததில் வண்டியின் உரிமம்
தாயின் பெயரில் இருக்குது, தகப்பன் வெளி நாடு, இவர்களிடம் ஓட்டுவதற்கு எந்த ஒரு
உரிமமும் கிடையாது. சரியான முறையில் கண்டித்து விட்டு அனுப்பி வைத்தேன், (குடும்ப
கவுர நிலையை கருதி பெயர்களை இதில் பதிய வில்லை).
விபத்து குறித்து செய்திகள் தினமும் பல இடங்களில் இருந்து
வந்து கொண்டு இருக்கின்றதே, இழந்தது ஒரு உயிர் மட்டுமில்லை, ஒரு தலைமுறையின் வேர்
பிடுங்கப்பட்டதாக இழந்த குடும்பங்கள் வாழ்நாள் முழுதும் சோகத்தை சுமந்து கொண்டே
இருப்பார்கள்.
அரசும், சில சமுதாய அமைப்புகளும் இறப்பின் இழப்பென்று ஒரு
தொகையை நீட்டிவிட்டு கடந்து போகலாம், தெரிந்தவர்கள் சிலர் துக்கம் விசாரித்து
விட்டு கவலைப்படாதீங்க என்ற வார்த்தையை சொல்லிவிட்டு போகலாம், 100வரிகளில்
எழுதத் தெரிந்தவர்கள் இதோ என்னைப் போல் கிறுக்கிக் கொண்டிருக்கலாம், நாற்பது வரியில்
மடக்கி சுருக்கமாய் எழுதத் தெரிந்தவர்கள் கவிதையாய் எழுதலாம், மூன்றாம்தர
பத்திரிகைகள் “இரண்டு சக்கர வாகனம் அப்பளமாய் நொறுங்கியது” என தலைப்புச் செய்தி எழுதிவிட்டு, மதியச் சோத்தில் இரசத்தில் அப்பளத்தை
நோருக்கிப்போட்டு உண்ணலாம, இதையெல்லாம் படிப்பவர்கள் படித்துவிட்டு போகலாம்,
பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு விபத்து நடந்த இடத்தை மீண்டும் மீண்டும் வந்து பார்க்கலாம்,
இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே போகலாம். போனாலும் போன உயிர் திரும்பிடுமா?
விபத்துகள் என்பது கட்டுப்பாட்டை மீறி கண நேரத்தில்
நடப்பதுதான், தடுக்க முடியவில்லை, பல நேரங்களில் தவிர்க்க முடிவதில்லை. ஆனால்,
விபத்துக்கு ஏதுவான எல்லாக் காரணிகளையும் நாமேதான் உருவாக்கிக் கொண்டு வேறு எதையோ
காரணத்தைச் சொல்லி பழியை வேறு பக்கம் சுமத்தலாமா!.
நமதூர் சாலைகளில் நடந்து போகவே பயமாக இருக்குது, ஒரு பக்கம்
மின்னல் வேகத்தில் பறக்கும் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனமாகிய ஆட்டோவை
சொல்லவே தேவை இல்லை அப்படியே இடிக்கிறமாதிரி வந்து சடாரென்று கட் அடித்து போவதுனாலே
ஈரக்கொளைஎல்லாம் துடிதுடித்து போகின்றது, இதிலிருந்து தப்பித்து கொஞ்ச தூரம்
கடந்து போனால் ஸ்கூல் வேன்-அதுவும் அப்படித்தான் நம்ம காதுக்கு அருகில் வந்து
ஹாரனை பேஈங்ன்னு காது குருத்து கிழிந்து போகிறமாதிரி அடிக்கிறது, சரின்னு வேறு பக்கம்
போகலாம் என்றால் அங்கேயும் சிறுவர்கள் பைக்கை ஓட்டப் பழகுறேன்னு முழங்காலில் வந்து
இடிக்கிறாங்கள்.
இதற்கெல்லாம் என்னதான் தீர்வு ?
இப்படிக்கு,
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ.
(மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur
District Organizer. Adirampattinam-614701.
ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிக்கிறது குறிப்பாக தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே போகிறது. விதிமுறைகளை கையாளவில்லை என்பதாக அறிக்கை கூறகிறது. அடிப்படை சாலை விதிமுறைகள் பள்ளியில் பாடமாக நடத்த வேண்டும்.
ReplyDeleteசிறு பழுதுகளை தாங்களாக சரிசெய்து கொள்வது எப்படி, பெரிய பழுதுகளின்போது யாரை அணுகி நிவர்த்தி செய்ய வேண்டும் என்பவை குறித்து தெளிவான பயிற்சி அளித்த பின்னரே வாகன ஓட்டிகளுக்கு வெளிநாடுகளில் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. இங்கே பணம் கொடுத்து லைசென்ஸ் வாங்கப் படுகிறது.
தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற, குடும்பத்தை நினைத்து, சாலை விதிகளை கடைபிடித்து பயணிப்போம் இனிதாய். தலை கவசம்! உயிர் கவசம் !! என்ற வார்த்தை நினைவில் வைப்போம்.
உங்கள் சிந்தனையில் உதித்தவைகளையும் சேகரித்துள்ளேன் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க.
Deleteஏன் இந்த வேகம் எதற்க்கு இந்த சோகம்
ReplyDeleteஇதெற்கெல்லாம் என்னதான் தீர்வு என்றால் சட்டம் சரியாக தன் கடமையை செய்தால் உயிர் இழப்புகள் குரைவதற்க்கு வாய்புண்டு விதிமுறைகளை கையாலுவதில்லை என்பதைவிட சாலை விதிமுறைகளை அரசும் காவல்துறையும் சரியாக கவனம் செலுத்துவதில்லை என்பது தான் உண்மை.
காக்கா உங்களின் ஆதங்கமும் சரியே உங்களின் ஆக்கத்தில் நீங்கள் குறிபிட்டுயுள்ளது அத்துனையும் உண்மையே இதற்க்கு காரணம் தாய் தந்தை மற்றும் இளைஞர்களை மட்டும் குறை சொல்வதில் தவறு 50% இளைஞர்கள் பக்கம் இருந்தாலும் 50% சட்டத்தின் பக்கமே குறை உண்டு ஆண்டு தோறும் சாலை விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கை இந்தியாவிலும் தமிழத்திலும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்றால் காரணம் என்ன ? விதிமுறைகளை அரசாங்கமும் காவல்துறையும் சரியாக நடைமுறை படுத்துவது கிடையாது. சட்டம் சரியாக இருக்குமேயானால் உயிர் இழப்பு குறைய வாய்ப்புகள் அதிகம் உணடு.
இந்தியாவில் சரியாக சாலை விதிமுறைகளை பேனாதவன் இங்கு வந்தவுடன் அப்படி நடப்பது கிடையாது சாலை விதிமுறைகளை சரியாக பின்பற்றுகிறான் என்றால் இதற்க்கு யார் காரணமென்று சொல்வது
அரபு நாடுகளில் தலை காவசம் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஒட்ட முடியாது ஒட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஒட்ட முடியாது மீரி ஓட்டினால் என்னா நடக்குமென்பது அவர்களுக்கு தெரியும் சட்டத்தின் மேல் இருக்கும் பயத்தால் யாரும் ஓட்டவும் மாட்டார்கள் உயிர் இழப்பும் மிக குறைவு . ஏன் நமது நாட்டில் அந்த சட்டம் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம் உண்டு என்பது தெரியும், அந்த சட்டம் மட்டுமிருந்து ஒரு புன்னியமும் இல்லை சட்டதின் செயல்பாடு எப்படியுள்ளது என்பது தான் கேள்வி சட்டம் தன் கடமையை சரியாக செய்யுமேயானல் இது போன்று உயிர் இழப்புகள் குறைய நிறையாவே வாய்ப்புண்டு.
என்றும் அன்புடன்
அதிரைஅல்மாஸ்
சட்டம் தன் வேலையை சரியாக செய்தால், மனிதன் தவறு செய்ய மாட்டான். இதுதான் உண்மை, இது உங்கள் கருத்துக்களில் தெள்ளத் தெளிவாக காட்டுக்கிறது.
Deleteதன் நாட்டில் பக்குவமாக வாகனத்தை இயக்கம் அரபிகள், நம் நாட்டுக்கு வந்தால் நம்ம பையன்களைவிட மோசமாக வாகனத்தை இயக்குவார்கள். காரணம் இங்கே ஒரு எலவும் கிடையாதே.
இன்னும் சிந்தித்தால் நிறைய பதில் கிடைக்கும்.
ReplyDelete