.

Pages

Wednesday, January 7, 2015

சென்னையில் புத்தக கண்காட்சி !

சென்னையில் பப்பாசியின் 38-ஆவது புத்தகக் காட்சி வருகிற 9-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 13 நாள்கள் நடைபெற உள்ளது. 700 அரங்குகளில் மொத்தம் 5 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளன.

புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை காட்சியைத் துவக்கி வைக்கிறார்.
அரசு விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், மற்ற நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் 9 மணி வரையும் காட்சி நடைபெற உள்ளது.

சுமார் 30 ஆயிரம் புதிய புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் விற்பனைக்கு வர உள்ளன. கலை, இலக்கியம், விஞ்ஞானம் என அனைத்துப் பிரிவு புத்தகங்களும் இந்தக் காட்சியில் இடம்பெறும்.
கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் கண்காட்சிக்கு வந்தனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

சென்னை நந்தனம் கல்லூரியில் கார்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து வாசகர்களை இலவசமாகக் கண்காட்சிக்கு வேன்களில் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 5 வேன்கள் இந்தப் பணியில் ஈடுபட உள்ளன.

கண்காட்சியில் ஏடிஎம் வசதியும் செய்து தரப்படும். புத்தகங்களை வாங்கி, அவற்றைக் கையோடு எடுத்துச் செல்ல விரும்பாவிட்டால், கூரியர் மூலம் அனுப்பி வைக்கும் வசதியும் உள்ளது. உணவு விடுதி அமைக்கப்படும். கழிப்பறை வசதிகள் உண்டு.

புத்தகக் காட்சியில் வாங்கப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீதம் கழிவு உண்டு. காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10 ஆகும். 12 வயதுக்கு ள்பட்ட சிறுவர்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. பலர் தினமும் புத்தகக் காட்சிக்கு வருவர். அவர்கள் ரூ.50 கொடுத்து சீசன் டிக்கெட் போல வாங்கிக் கொள்ளும் வசதியும் இந்த முறை செய்துள்ளோம்.

கண்காட்சிக்கு வருபவரின் நுழைவுச் சீட்டுகளில் குலுக்கல் முறையில் தினமும் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியின்போது கல்லூரி மற்றும் பள்ளி மாணவியரிடம் அவர்களது பேச்சு மற்றும் எழுத்துத் திறமைகளை வெளிக்கொணர்ந்து பாராட்டும் பரிசும் வழங்கும் பொருட்டு பல்வேறு நிலைகளில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தி, அவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக புத்தகங்களையும், கலந்துகொள்வோர் அனைவருக்கும் சான்றிதழ்களையும் பபாசி வழங்கி வருகிறது.

சின்னஞ்சிறார்களின் திறமைகளை வளர்ப்பதற்காக ஆண்டுதோறும் ஓவியப்போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு சிறந்த புகைப்படங்களுக்கான போட்டிகள் நடத்தவும், கட்டுரை, சிறுகதைப் போட்டிகள் நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்படுபவற்றைப் புத்தகமாக வெளியிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மக்களின் வாசிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கவும், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புத்தகக் காட்சிகளின்போது தினமும் மாலை நேரத்தில் புகழ் பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது வாழ்விற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகையாளர்களை வரவழைத்து வாழக்கைக்குத் தேவையான கருத்துகளை எடுத்துச் சொல்ல ஏற்பாடுகள் செய்யபடுகிறது.

பொதுமக்கள் மற்றும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு குறும்பட அரங்கு அமைத்து, குறும்படப் போட்டிகள் நடத்தப்படுவதுடன், குறும்படங்களும் திரையிடப்பட உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு
கல்லூரி மாணவர்களுக்கு

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.