.

Pages

Saturday, January 17, 2015

அதிரையில் காணும் பொங்கல் களைகட்டியது: விளையாட்டு போட்டிகள் நடத்தி உற்சாக கொண்டாட்டம் !

பொங்கல் பண்டிகையின் 4-வது நாள் கொண்டாட்டமான காணும் பொங்கல் அதிரையில் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் தினத்தன்று அதிரை விநாயகர் கோவில் தெரு நண்பர்களால் வருடம்தோறும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் கோலப்போட்டி, பானை உடைத்தல், சைக்கிள் ரேஸ், ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, பாட்டில் நீர் நிரப்புதல், கனியும் கரண்டியும், பேச்சு போட்டி, ஊசி நூல் கோர்த்தல், சாக்கு போட்டி, ரொட்டி கவ்வுதல், சமத்துவ பொங்கல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சிறுவர் சிறுமிகள் உற்சாகமாக கலந்துகொண்டு விளையாடினர். வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பெண்கள் உட்பட அப்பகுதியினர் திரளாக கலந்துகொண்டு ரசித்தனர்.

2 comments:

  1. பொங்கல் வைப்பது என்பது சூரியன் நமஸ்காரம் செய்வது. சூரியனை வணங்குவது ஹிந்துகள் வழிபாடு.
    ஏாக இறைவனை மட்டும் வணங்கும் நாம் கலாச்சாரத்தில் சீரழிந்து விடாமல் எல்லாம் வல்ல இறைவன்
    நாம் அனைவரையும் பாதுகாப்பனாக ஆமீன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.