.

Pages

Sunday, January 11, 2015

ரேஷன் அரிசி பதுக்கலை தடுத்து நிறுத்திய அதிரை இளைஞர்கள் !

அதிரை நடுத்தெரு கீழ்புறம், வாய்க்கால் தெரு, புதுத்தெரு ஆஸ்பத்திரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தக்வா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 1 ம் நம்பர் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். இங்கு சீனி அரிசி, மண்ணெண்னை, பாமாயில், பருப்பு, உளுந்து உள்ளிட்ட முக்கிய அத்திவாசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்வதற்காக நுகர்வோர் வாணிப கிடங்கிலிருந்து அரிசி மூடைகள் லாரி மூலம் 1 ம் நம்பர் ரேஷன் கடைக்கு இன்று பிற்பகல் கொண்டு வரப்பட்டது. இவற்றை லாரியிலிருந்து இறக்கி ரேஷன் கடை குடோனில் ஊழியர்கள் அடுக்கி வைத்தனர். அப்போது சில மூடைகளை மற்றொரு இடத்திற்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இவற்றை மறைவிடத்திலிருந்து பார்வையிட்ட இப்பகுதி இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக சம்பந்தபட்டோரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. உடனே அதிரை காவல்துறைக்கும், வட்ட வழங்கல் அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேஷன் கடை பொறுப்பாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பட்ட பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அப்பகுதியினர் வேதனையுடன் நம்மிடம் கூறுகையில்...
இந்த ரேஷன் கடையில் அட்டைதாரர்களுக்கு வழங்கும் ரேஷன் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாகவும், முன்னறிவிப்பின்றி கடையை அடைத்து விட்டு செல்வதால் பொருட்கள் வாங்க வரும் நாங்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக வருத்தத்துடன் தெரிவித்தனர். கடையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வட்ட வழங்கல் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பொது இடங்களில் கேமரா பொறுத்தும் தமிழ் நாடு அரசு எல்லா ரேசன் கடைகளிலும் கேமரா பொறுத்த வேண்டும்.

    ரேசன் கடைகளின் இருக்கும் டிஜிட்டல் எடை கருவியில் முன்னும் பின்னும் எடை தெரிகிறதா என்பதை அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்ய வேன்டும்.

    குறிப்பாக மதியம் 2 to 3 மணி வரையிளும் எல்லா ரேசன் கடைகளையும் கண்காணிக்க வேண்டும்.

    ரொம்ப முக்கியமான ஒன்று பொருல் வாங்க கூடிய ஒவ்வொருவரும் எடையை கவனமாக பார்ப்பதோடு நம் ரேசன் அட்டையில் வாங்கிய பொருல் மட்டும் குறிக்கப்படுகிறதா அல்லது வாஙகாத பொருல்களும் குறிக்கப் படுகிறதா என்பதையும் கண்கானிக்க வேன்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.