இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்வதற்காக நுகர்வோர் வாணிப கிடங்கிலிருந்து அரிசி மூடைகள் லாரி மூலம் 1 ம் நம்பர் ரேஷன் கடைக்கு இன்று பிற்பகல் கொண்டு வரப்பட்டது. இவற்றை லாரியிலிருந்து இறக்கி ரேஷன் கடை குடோனில் ஊழியர்கள் அடுக்கி வைத்தனர். அப்போது சில மூடைகளை மற்றொரு இடத்திற்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இவற்றை மறைவிடத்திலிருந்து பார்வையிட்ட இப்பகுதி இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக சம்பந்தபட்டோரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. உடனே அதிரை காவல்துறைக்கும், வட்ட வழங்கல் அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேஷன் கடை பொறுப்பாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பட்ட பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அப்பகுதியினர் வேதனையுடன் நம்மிடம் கூறுகையில்...
இந்த ரேஷன் கடையில் அட்டைதாரர்களுக்கு வழங்கும் ரேஷன் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாகவும், முன்னறிவிப்பின்றி கடையை அடைத்து விட்டு செல்வதால் பொருட்கள் வாங்க வரும் நாங்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக வருத்தத்துடன் தெரிவித்தனர். கடையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வட்ட வழங்கல் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

.jpg)


.jpg)
This comment has been removed by the author.
ReplyDeleteபொது இடங்களில் கேமரா பொறுத்தும் தமிழ் நாடு அரசு எல்லா ரேசன் கடைகளிலும் கேமரா பொறுத்த வேண்டும்.
ReplyDeleteரேசன் கடைகளின் இருக்கும் டிஜிட்டல் எடை கருவியில் முன்னும் பின்னும் எடை தெரிகிறதா என்பதை அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்ய வேன்டும்.
குறிப்பாக மதியம் 2 to 3 மணி வரையிளும் எல்லா ரேசன் கடைகளையும் கண்காணிக்க வேண்டும்.
ரொம்ப முக்கியமான ஒன்று பொருல் வாங்க கூடிய ஒவ்வொருவரும் எடையை கவனமாக பார்ப்பதோடு நம் ரேசன் அட்டையில் வாங்கிய பொருல் மட்டும் குறிக்கப்படுகிறதா அல்லது வாஙகாத பொருல்களும் குறிக்கப் படுகிறதா என்பதையும் கண்கானிக்க வேன்டும்.