நிகழ்ச்சிக்கு அதிரை கிளை தலைவர் பீர் முஹம்மது தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முஜிபூர் ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்தினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொருளாளர் எம் ஐ சுலைமான் அவர்கள் கலந்துகொண்டு 'வஹி அல்லாதது வழிகேடே !' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.
இதைதொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் எம் எஸ் சையது இப்ராஹீம் சூனியம் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு பதிலளித்து பேசினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அதிரை கிளை செயலாளர் எஸ்.பி பக்கீர் முஹம்மது நன்றியுரை ஆற்றினார். கூட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியினை தவ்ஹீத் ஜமாதின் http://www.onlinepj.com/ http://www.livestream.com/tntjlive ஆகிய இணையதளங்களில் நேரடி ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.














This comment has been removed by the author.
ReplyDeleteபெருமளவில் வெளியூரிலிருந்து வந்து கலந்து கொண்டவர்களை வாழ்த்துகிறேன்.
ReplyDelete//பெருமளவில் வெளியூரிலிருந்து வந்து கலந்து கொண்டவர்களை வாழ்த்துகிறேன்.//
ReplyDeleteஅப்படியானால் உள்ளூர்வாசிகள் மிக சொர்ப்பமோ ? மீட்டிங் நடத்துவதில் இப்படியெல்லாம் தந்திரமும் உண்டா ? எல்லாமும் இப்படித்தான் இருக்குமோ ?