.

Pages

Saturday, January 10, 2015

அதிரையில் TNTJ நடத்திய இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்: நேரடி ரிப்போர்ட் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் [ TNTJ ]அதிரை கிளையின் சார்பில் அதிரையில் தக்வா பள்ளி அருகே இன்று 10-01-2015 மஃரிப் தொழுகைக்கு பிறகு இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிரை கிளை தலைவர் பீர் முஹம்மது தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முஜிபூர் ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்தினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொருளாளர் எம் ஐ சுலைமான் அவர்கள் கலந்துகொண்டு  'வஹி அல்லாதது வழிகேடே !' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

இதைதொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் எம் எஸ் சையது இப்ராஹீம் சூனியம் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு பதிலளித்து பேசினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அதிரை கிளை செயலாளர் எஸ்.பி பக்கீர் முஹம்மது நன்றியுரை ஆற்றினார். கூட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியினை தவ்ஹீத் ஜமாதின் http://www.onlinepj.com/ http://www.livestream.com/tntjlive ஆகிய இணையதளங்களில் நேரடி ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பெருமளவில் வெளியூரிலிருந்து வந்து கலந்து கொண்டவர்களை வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  3. //பெருமளவில் வெளியூரிலிருந்து வந்து கலந்து கொண்டவர்களை வாழ்த்துகிறேன்.//

    அப்படியானால் உள்ளூர்வாசிகள் மிக சொர்ப்பமோ ? மீட்டிங் நடத்துவதில் இப்படியெல்லாம் தந்திரமும் உண்டா ? எல்லாமும் இப்படித்தான் இருக்குமோ ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.