.

Pages

Monday, April 20, 2015

வீடுகளில் கழிப்பறை கட்ட ₹ 12 ஆயிரம் மானியம் !

வீடுகளில் கழிப்பறை கட்ட ₹ 12 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சுப்பையன் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் அற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2015-16-ம் ஆண்டு வரவு-செலவு திட்ட உரையில் 15 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் 25 ஆயிரத்து 800 கழிப்பறைகளும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 48 ஆயிரத்து 48 கழிப்பறைகளும் 2015-16-ம் ஆண்டில் கட்டப்படும். ஒவ்வொரு வீடுகளிலும் கழிப்பறை கட்டுவதற்காக தகுதிவாய்ந்த பயனாளிக்கு ₹ 12 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

ஊரகப்பகுதிகளில் கழிப்பறைகள் கட்டுவதற்கான தேவையை உருவாக்குவது மற்றும் கட்டப்பட்ட கழிப்பறைகள் தொடர்ந்து உபயோகப்படுத்துவதை உறுதி செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான சுயஉதவிக்குழு கூட்டமைப்பு ஆகியவற்றை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ளும் அமைப்புகளுக்கு ஒவ்வொரு வீட்டில் கட்டப்படும் கழிப்பறைக்கும் ₹ 300 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

கழிப்பறை கட்டுவதற்கான விண்ணப்பங்கள் கிராம ஊராட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் இலவசமாக கிடைக்கும். இந்த திட்டம் கிராம ஊராட்சியால் செயல்படுத்தப்படும். கிராம ஊராட்சி தலைவரின் உத்தரவு பெற்றவுடன் 3 மாதங்களுக்குள் கழிப்பறை கட்டி முடிக்கப்படும். கழிப்பறை இல்லாதோர் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த திட்டத்தை சிறப்பாக பயன்படுத்தும் சமூகம் சார்ந்த அமைப்புகளுக்கும், ஊராட்சிகளுக்கும், களப்பணியாளர்களுக்கும் விருது வழங்கப்படும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

9 comments:

  1. கழிப்பறை கட்ட மானியம் பெற விருப்பமுள்ளவர்கள், கிராம ஊராட்சி அலுவலகத்தில் பெயர் பதிவு செய்ய
    வேண்டும்.பின் கழிப்பிடம் கட்டியதும், அந்த கழிப்பறையுடன் பயனாளிகளின் போட்டோவும் இணைத்து வட்டார வளர்ச்சி அலுவலத்தில் கொடுக்கப்பட்டு மானியம் பெறப்பட்டு வந்தது. இத் திட்டம் அறிமுகப் படுத்திய இடங்களில் பயனாளிகளுக்கு மான்யம் வந்து சேரவில்லையாம், எல்லாம் கமிசனாக தான் இருக்கும்.

    இன்னும் பல வீடுகளில், கழிப்பிட வசதி இல்லாதது, வேதனை அளிக்கிறது. குழந்தைகளுக்கு, சிறு வயது முதலே, கழிவறையை பயன்படுத்துவது பற்றி பெற்றோர்கள் எடுத்து கூற வேண்டும். அப்போது தான், சுகாதாரம் காக்கப்படும்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா நான் திருவிடைமருதுர் தாலுகா தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்த்தவர் நான் 147 வடக்கு தெரு மரத்துறை 609204 என்ற முகவரியில் வசித்து வருகிறேன். எங்கள் வீட்டில் இலவச கழிப்பிட வசதி திட்டத்தின் கீழ் கழிவரை கட்டினோம். ஆனால் தரமாக கட்டி தராத காரணத்தால், இடிந்துள்ளது. தகுந்த அதிகாரிகளை விசாரணை செய்யுமாறும். எங்களுக்கு புதிய கழிவரை கட்டி தருமாறும் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. எங்க வீட்ல கழிப்பறை இல்லை கட்டிதருவாங்களா

    ReplyDelete
  5. Sir my name siva my home pasumai veedu engkalukku kattalama sir veedu katdi 8 yearsh akiddu engkalathu paluthakitdu nangka kattalama sir

    ReplyDelete
  6. Sir my name siva my home pasumai veedu engkalukku kattalama sir veedu katdi 8 yearsh akiddu engkalathu paluthakitdu nangka kattalama sir

    ReplyDelete
  7. Sir my name siva my home pasumai veedu engkalukku kattalama sir veedu katdi 8 yearsh akiddu engkalathu paluthakitdu nangka kattalama sir

    ReplyDelete
  8. பயனாளியே கட்டி மானியம் பெறலாமா? கான்ரேட்காரங்க கட்டிதார்றோம் என்கிறார்கள்.சரியாக கட்டுவதில்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.