நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் பல்லாயிரம் மக்கள் உயிரை பலி வாங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதில்லை. ஆனாலும் தமிழ்நாடு பாதுகாப்பான பகுதி இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிலநடுக்கம் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 5–வது எண் அதிக பாதிப்புக்கொண்டதாகும். தமிழ்நாடு 3–வது நிலநடுக்க அளவீட்டில் வருகிறது. இதன்படி 6 ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு தமிழ்நாட்டில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த அளவுக்கு நிலநடுக்கம் வந்தால் சென்னை, கோவை, மதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சென்னையை பொறுத்தவரை ஏராளமான பழங்கால கட்டிடங்கள் உள்ளன. இவை 6 ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு நிலநடுக்கம் வந்தால் அதை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு இல்லை என்று நிபுணர்கள் சொல்கின்றனர். இதனால் சென்னையில் பேராபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் தற்போது விண்ணை முட்டும் அளவுக்கு உயரமான கட்டிடங்கள் சென்னையில் கட்டப்படுகின்றன. அவை பூகம்பத்தை தாங்கும் அளவிற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் டீன் பேராசிரியர் சாந்தகுமார் கூறியதாவது:–
தற்போது சென்னையில் கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடங்களின் கீழ் பகுதியில் கார் பார்க்கிங் வசதிக்காக தூண்கள் அமைத்து கட்டப்படுகின்றன. இந்த தூண்கள் சரியான தாங்கும் திறனை கொண்டுள்ளதா என்பதில் சந்தேகங்கள் இருக்கிறது.
இதுபோன்ற தூண்கள் அமைத்து கட்டப்படும் கட்டிடங்களில் ஒவ்வொரு தூணும் குறைந்தபட்சம் ஒரு அடி அகலத்தில் இருக்க வேண்டும். 10 மாடி கட்டிடம் மற்றும் அதற்கு மேற்பட்டதாக இருந்தால் ஒரு மீட்டர் அகலத்தில் இருக்க வேண்டும்.
பூகம்பத்தை தாங்கும் அளவுக்கு தூண்கள் அமைக்கப்படும்போது கட்டிட செலவில் 25 சதவீதம் தூண்களுக்கே செலவிட வேண்டியது வரும். மேலும் ஒட்டுமொத்தமாக நிலநடுக்கத்தை தாங்கும் கட்டிடம் கட்டுவதாக இருந்தால் 15 சதவீதத்துக்கு மேல் அதிக செலவு செய்ய வேண்டியது இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையை பொறுத்தவரை 6 ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டால் அடையாறு கரையோரத்தில் உள்ள கட்டிடங்களுக்கு மிகுந்த பாதிப்புக்கு ஏற்படும் என்று கணித்துள்ளனர். ஏனென்றால் இந்த பகுதியில் மண்கள் நெகிழ்வு தன்மையுடன் இருக்கிறது. அதேபோல கடற்கரை பகுதியில் உள்ள கட்டிடங்களும் பூகம்பத்தை தாங்குவது கடினம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை ஆலோசகர் எமராஜிடம் கேட்டபோது, கடந்த 10 ஆண்டில் சென்னை நகரில் ஒவ்வொரு ஆண்டும் 1000 கோடி ரூபாய் அளவுக்கு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அவை நிலநடுக்கத்தை தாங்கும் அளவிலேயே கட்டப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
இந்திய தர அமைப்பு ஆய்வில், தமிழ்நாட்டில் காவிரி, வைகை கரையோர பகுதிகள், கன்னியாகுமரி பகுதி போன்றவற்றில் பூகம்பம் வந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
நன்றி: மாலைமலர்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.